குடும்ப தகராறில் 3 வயது குழந்தையுடன் செல்போன் கோபுரத்தில் ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல் - பரபரப்பு!

கோவை செட்டிபாளையம் பகுதியில் குடும்ப தகராறு காரணமாக கையில் 3 வயது குழந்தையுடன் செல்போன் கோபுரம் மீது ஏறி இளைஞர் தற்கொலை மிரட்டல் விடுத்த நிலையில், போலீசார் எட்டு மணி நேரமாக போராடி அவரையும் குழந்தையும் சமாதானம் செய்து பத்திரமாக மீட்டனர்.


கோவை: செட்டிபாளையம் அருகே குடும்பத்தகராறில் 3 வயது குழந்தையுடன் செல்போன் கோபுரத்தில் ஏறிய இளைஞர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தை சேர்ந்த செல்வம் என்பவர் கோவை செட்டிபாளையம் எம்.ஆர் நகர் பகுதியில் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான செல்வத்திற்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகறாரு இருந்து வந்துள்ளது.

இதனிடையே கடந்த 2021ம் ஆண்டு கணவன் - மனைவி பிரச்சினையில் தனது தாய் வீட்டிற்கு சென்ற மனைவி காளீஸ்வரியை தன்னுடன் சேர்த்து வைக்க கோரி செட்டிபாளையம் பகுதியிலுள்ள செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த செல்வத்தை பல மணி நேரம் போராடி மீட்ட காவல்துறையினர் இருவரையும் சேர்த்து வைத்தனர்.

தொடர்ந்து கணவன் - மனைவி இருவரும் ஒன்றாக வசித்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காளீஸ்வரி மீண்டும் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதனால் மனமுடைந்த செல்வம் நேற்று மாலை தனது குழந்தைகளை பார்ப்பது போல் காளீஸ்வரியின் வீட்டிற்கு சென்று அங்கிருந்த மூன்று வயது மகனை தூக்கி கொண்டு செட்டிபாளையம் பகுதியில் உள்ள சுமார் 250 அடி உயரமுள்ள பி.எஸ்.என்.எல் செல்போன் கோபுரத்தில் ஏறி தன்னை மனைவியுடன் சேர்த்து வைக்குமாறு கோரி மீண்டும் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

இதை கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் குழந்தையுடன் செல்போன் கோபுரத்தில் நின்று மிரட்டல் விடுத்த செல்வத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

காவல்துறையினரின் சமாதானத்தை ஏற்க மறுத்த செல்வமோ, தனது சொந்த ஊரான சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் இன இருவரும் சம்பவ இடத்திற்கு வந்து தனது குடும்ப பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் அப்போதுதான் தான் கீழே இறங்குவேன் என கூறி கோபுரத்தின் மீது குழந்தையுடன் அமர்ந்து கொண்டார்.

நேற்று மாலை 5 மணிக்கு செல்போன் கோபுரத்தில் ஏறிய அந்த நபர் காவல்துறையினர், பொதுமக்கள், தீயணைப்புத் துறையினர் என பலரும் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய போதும் இறங்காமல் அங்கேயே இருந்தார்.

நள்ளிரவு சுமார் 12 மணிக்கு அங்கு வந்த அவரது மனைவி காளீஸ்வரி இனிமேல் சேர்ந்து வாழ்வேன் எந்த பிரச்சனையும் வேண்டாம் என்று கூறியதை தொடர்ந்து நள்ளிரவு சுமார் ஒரு மணி அளவில் குழந்தையுடன் கீழே இறங்கினார் போதை ஆசாமி செல்வம்.

இதை அடுத்து குழந்தையுடன் அந்த நபரை மீட்ட போலீசார் ஆம்புலன்ஸ் வாகன மூலம் இருவரையும் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிவித்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் தையல்நாயகி, செல்போன் கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த செல்வம் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் மனநல ஆலோசனை வழங்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...