பன்னிமடை அரசு பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ!

துடியலூர் அடுத்த பன்னிமடை அரசு மேல்நிலை பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பில் முதலிடம் பிடித்த 21 மாணவர்களுக்கு, பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் எம்.எல்.ஏ தியாகி வெ.எல்லமநாயுடு பொதுநல அறக்கட்டளை சார்பில் 10ஆம் ஆண்டாக மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகையை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி. அருண்குமார் வழங்கினார்.



கோவை: பன்னிமடை அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி. அருண்குமார் வழங்கினார்.

கோவை துடியலூர் அடுத்த பன்னிமடை அரசு மேல்நிலை பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர், முன்னாள் எம்.எல்.ஏ தியாகி. வெ.எல்லமநாயுடு பொது நல அறக்கட்டளை சார்பில் 10ம் ஆண்டு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா அனைவரையும் வரவேற்று பேசினார். அறக்கட்டளை தலைவர் ஆறுமுகசந்திரமோகன் தலைமை தாங்கினார். முன்னாள் ஓன்றிய கவுன்சிலர், அறக்கட்டளை பொதுச்செயலாளர் ஆர்.வி.சி. என்.நடராஜன் அறிமுக உரையாற்றினார்.

முன்னாள் தலைமை ஆசிரியர் கவிஞர் இரவீந்திரன் விழாப் பேரூரையாற்றினார்.



சிறப்பு விருந்தினராக கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கலந்துக்கொண்டு பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி கல்வியில் முதல் இடங்களை பெற்ற 21 மாணவ, மாணவிகளுக்கு சுமார் 40 ஆயிரம் மதிப்புள்ள கல்வி ஊக்கத்தொகைகளை வழங்கி மாணவர்களை பாராட்டி பேசினார்.



மேலும் பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட அனைத்து ஆசிரியர்களும் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.



அறக்கட்டளை கெளரவ தலைவர் முத்துகுமாரசாமி, முன்னாள் எம்.எல்.ஏ சின்னராஜ், முன்னாள் அறக்கட்டளை தலைவர் செல்வராஜ், அறாக்கட்டளை கெளரவ ஆலோசகர் செல்லப்பன் ஆகியோர் காமராஜர் மற்றும் எல்லமநாயுடு திருவுருவ படங்களை திறந்து வைத்தனர்.

தொடர்ந்து அறக்கட்டளை பொருளாளர் ராமச்சந்திரன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.



இந்த விழாவில் அறக்கட்டளை குழுவினை சேர்ந்த அறக்கட்டளை செயலாளர்கள் பேரூர் நாகராஜ், அசோக்குமார், ராமசாமி, கணுவாய் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் பாரதிசெல்வம், அறக்கட்டளை சட்ட ஆலோசகர் வழக்குரைஞர் பழனிச்சாமி, சின்னு ராமகிருஷ்ண, துரைசாமி என்கிற வெங்கிடசாமி, பாலகிருஷ்ணன் மற்றும் ஒன்றியக்குழு தலைவர் நர்மதா துரைசாமி, பன்னிமடை ஊராட்சித்தலைவர் ரத்தினம் பி.எஸ்.எம்.மருதாசலம், துணைத்தலைவர் அருள்குமார், குருடம்பாளையம் ஊராட்சித்தலைவர் டி.ரவி, பி.டி.மோகன்ராஜ், முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன், துரைசாமி, சுரேஷ்குமார், முன்னாள் துணைத்தலைவர்கள் ராஜப்பன், தாமோதரன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, இணை செயலாளர் காளியப்பன், நிர்வாகிகள் சம்பத், மயில்சாமி, எத்திராஜ், சுந்தர்ராஜ், சுரேந்திரன், ராமச்சந்திரன், மருதாசலம், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மயில்ராணி, துணை தலைவர் லட்சுமி, அரசு ஆரம்ப பள்ளி பி.டி.ஏ தலைவர் டி.பி.ராஜேந்திரன், கவுன்சிலர் கோபாலசாமி உட்பட கவுன்சிலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.



Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...