சர்வதேச நீதி நாள் - உடுமலை பேருந்து நிலையத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்!

சர்வதேச நீதிநாளை முன்னிட்டு உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் புதிய பேருந்து நிலையத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. இதில் நீதிபதிகள் M.மணிகண்டன் மற்றும் K.விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சட்ட உதவி மைய சேவைகளை பெறுவது குறித்து எடுத்துரைத்தனர்.


திருப்பூர்: சர்வதேச நீதி நாளை முன்னிட்டு உடுமலை பேருந்து நிலையத்தில் வட்டசட்ட பணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் நேற்றைய தினம் (17.07.2023) "சர்வதேச நீதிநாள்"-ஐ முன்னிட்டு உடுமலைப்பேட்டை புதிய பேருந்து நிலையத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

இதில் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியான, M.மணிகண்டன் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1 நீதிபதி, K.விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடையே இலவச சட்ட உதவி மையத்தின் சேவைகள் மற்றும் மக்கள் அதை பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தனர்.



இதில் வழக்கறிஞர்கள், அப்துல்நாசர், செந்தில்குமார், மகேஸ்வரன், சத்தியவாணி, தம்பிபிரபாகரன் மற்றும் உடுமலைப்பேட்டை சட்டம் ஒழுங்கு உதவி காவல் ஆய்வாளர்கள், சிவராஜ், தங்கவேல் பிற காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் கலந்து கொண்டனர்.

இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவச சட்ட சேவைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் கொடுக்கப்பட்டது.

Newsletter

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...