தாராபுரத்தில் நகை வாங்குவது போல் தங்க வளையல்களை திருடிச்சென்ற 3 பெண்கள் - சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

தாராபுரம் அமராவதி சிலை அருகே செயல்பட்டு வரும் நகைக்கடையில் நகை வாங்குவது போல் வந்த 3 பெண்கள், 12 கிராம் தங்க வளையல்களை திருடிச்சென்ற சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



திருப்பூர்: தாராபுரத்தில் நகை கடையில் 3 பெண்கள் நகை வாங்குவது போல் வந்து தங்க வளையல்களை திருடிச்சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அமராவதி சிலை அருகே (தயா கோல்ட்) தனியார் பெயரில் தயா என்பவர் தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி, பிற்பகல் 3 மணியளவில் 3 பெண்கள் நகை கடைக்கு வந்துள்ளனர்.

அப்போது, அவர்கள் டாலர் வாங்குவதாக கூறி கடையில் இருந்த நகைகளை நோட்டமிட்டுள்ளனர். அப்போது டாலர் பிடிக்கவில்லை வளையல் காட்டுங்கள் என நகைக்கடை உரிமையாளரிடம் கேட்டுள்ளனர். அதற்கு நகைக்கடை உரிமையாளர் 12,கிராம் எடையுள்ள இரண்டு தங்க வளையல்களை காண்பித்துள்ளார்.



அப்போது 3 பெண்களில் ஒருவர் தங்க வளையல்களை கையில் அணிந்து கொண்டார். இதனையடுத்து, மற்ற 2 பெண்களும் வேறு டிசைனில் வளையல் காட்டுமாறு கடை ஊழியரை கேட்டுள்ளனர்.

அதற்காக ஷோகேசில் வைத்திருந்த வேறு தங்க வளையல்களை நகை கடைக்காரர் காண்பித்துள்ளார்.



அதே நேரத்தில் தங்க வளையல் அணிந்திருந்த ஒரு பெண் கடையை விட்டு நைசாக கிளம்பிச் சென்றார்.



அதன்பிறகு மீதம் இருந்த இரண்டு பெண்களும் தங்களுக்கு மாடல் எதுவும் பிடிக்கவில்லை என சொல்லிவிட்டு கடையிலிருந்து நைசாக சென்று விட்டனர்.

மூன்று பெண்களும் சென்றவுடன் கடை உரிமையாளர் காண்பித்த தங்க வளையல்களை ஷோகேஸ் இல் அடுக்கி வைத்த போது 12 கிராம் எடை கொண்ட இரண்டு தங்க வளையல்கள் மட்டும் காணவில்லை என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கடையின் உரிமையாளர் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார்.

அப்போது மூன்று பேரும் நகை கடை உரிமையாளரை ஏமாற்றி தங்க வளையல்களை திருடி சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று பெண்களை தேடிச் சென்றார் ஆனால் அவர்கள் எங்கும் கிடைக்கவில்லை.

அதன் பிறகு தனது கடையில் தங்க வளையல்கள் திருடு போன சிசிடிவி காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு நகை கடைக்காரர்கள் உஷாராக இருங்கள் எங்களது நகை கடையில் மூன்று பெண்கள் தங்க வளையல்களை திருடி சென்றுள்ளனர் என பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில், இதுகுறித்து தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் தங்க நகைக்கடை உரிமையாளரை நேரில் விசாரித்து வருகின்றனர்.

தாராபுரத்தில் பட்டப்பகலில் 3 பெண்கள் தங்க வளையல்களை நூதனமாக திருடிச்சென்ற சம்பவம் தாராபுரம் நகைக்கடை உரிமையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...