கருணாநிதி நூற்றாண்டு விழா - 5000க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக சார்பில், கோவையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் கலந்து கொண்டு, 5000க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



கோவை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவையில் திமுக சார்பில், 5000க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, மருத்துவ முகாம், பொதுக்கூட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.



இதேபோல், கோவை தேர் நிலைத்திடலில், கோவை மாநகர் மாவட்டம், பெரிய கடைவீதி பகுதி கழகம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் தலைமையில் நடைபெற்றது.



இதில்., தையல் எந்திரம், சேலை, மிக்ஸி, ஐயன்பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட பொருட்கள் 5 ஆயிரம் பேருக்கு மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் நா.கார்த்திக் கூறியதாவது,



முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி கோவையில் நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம், பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

கல்வி உதவித்தொகை, தையல் எந்திரம், மிக்ஸி, கிரைண்டர், ஐயன்பாக்ஸ், சேலை என பயன் உள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு முழுவதும் அனைத்து பகுதியிலும் நலத்திட்ட உதவிகள் வழங்குவோம்.

பாஜகவை சேர்ந்தவர்கள் வாய்க்கு வந்தபடி உளறி வருவதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. மக்களுக்கு சேவை செய்யவே ஆட்சி அதிகாரத்தில் நாங்கள் உள்ளோம்.

பாஜகவினர், மக்கள் மீது அக்கறை இல்லாதவர்கள், நாங்கள் அப்படி இல்லை. ஏராளமான நலத்திட்டங்களை வழங்கி மக்கள் பணி செய்வதோடு மட்டுமின்றி, மக்களின் தேவைகளை அறிந்து அதை பூர்த்தி செய்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...