கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொடர் விபத்து : வேகத்தடை அமைத்து தர வலியுறுத்தி தமுமுக சார்பில் திடீர் சாலை மறியல்!

கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அண்ணா நகரில் தொடர் விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் அப்பகுதியில் வேகத்தடை அமைத்து தர வலியுறுத்தி தமுமுகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: பல்லடம் அருகே கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிகழும் தொடர் விபத்துகளை தடுக்கும் வகையில் வேகத்தடை அமைத்து தர வலியுறுத்தி தமுமுக சார்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்வது வழக்கம். இப்பகுதியில் தொடர் விபத்துக்கள் நடப்பதாக அப்பகுதியினர் மற்றும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை அண்ணா நகர் பகுதியில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து நிகழ்ந்தது. இதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த தந்தை மற்றும் மகள் இருவரும் காயமடைந்தனர்.



இதனைத்தொடர்ந்து அடிக்கடி அப்பகுதியில் விபத்துக்கள் நடப்பதாகவும் அதனை தடுக்க வேகத்தடை அமைத்து தர கோரி பல்லடம் தமுமுகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பல்லடம் போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...