10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்!

கள் இறக்க அனுமதி, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணை விற்பனை உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் காத்திருப்பு போராட்டத்தில் இறங்கியுள்ள விவசாயிகள் அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை: பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 18 மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டம் அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை மாவட்டம் செஞ்சேரிமலை அருகே உள்ள பச்சார்பாளையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.



இந்த காத்திருக்க போராட்டத்தை தமிழ்நாடு உழவர் தினமான இன்று விவசாயிகளுக்காக உயிரிழந்த விவசாயிகளுக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தி விவசாய சங்க தலைவர் ஈசன் முருகசாமி தொடங்கி வைத்தார்.



இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஈசன் முருகசாமி பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்புப் போராட்டமானது 18 மாவட்டங்களில் தமிழக பாதுகாப்பு விவசாய சங்கம் சார்பில் நடைபெறுகிறது.

கொப்பரை தேங்காய் விலை நிர்ணயம், பாமாயிலுக்கு பதிலாக நியாயவிலை கடைகளில் தேங்காய் எண்ணெயை அரசு விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகள் கள் இறக்குவதற்கும் அனுமதி ஆனைமலை நல்லாறு திட்டத்தை விரைந்து அரசு செயல்படுத்த வேண்டும்.

உரிய இழப்பீடு வழங்க வேண்டும் பால் முதல் விலையை உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது. மற்ற மாநிலங்களைப் போல விவசாய பொருள்களை தமிழகத்திலும் விற்பனை செய்ய வேண்டும்.

அரசு எங்களை அழைத்துப் பேசி வார்த்தை நடத்தினால் இது போன்ற போராட்டங்களில் வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு காண பயன்படுத்திக் கொள்வோம். இது போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற விவசாயிகளிடம் ஒற்றுமை இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...