கோவையில் ஆன்லைன் மூலம் பெண்ணிடம் ரூ.18.30 லட்சம் மோசடி - சைபர் போலீசார் விசாரணை!

இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்ந்து, ஆன்லைனில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறியதை நம்பி முதலீடு செய்த கோவையை சேர்ந்த பெண்ணிடம் ரூ.18.30 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.



கோவை: ஆன்லைனில் முதலீடு செய்ய ஆசை வார்த்தை கூறி கோவையை சேர்ந்த பெண்ணிடம் ரூ.18.30 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம் கோவைப்புதூரை சேர்ந்தவர் ஊர்மிளா (42). இவர் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் ஒன்றினை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது,

கடந்த சில மாதங்களுக்கு முன்பு எனக்கு உஸ்மா சர்மா என்ற பெயரில் வாட்ஸ் அப்பில் குறுந்தகவல் ஒன்று வந்தது. அந்த நபர் தான் சமூக வலைதள மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும் பகுதி நேர வேலை வாங்கி தருவதாகவும் கூறினார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்ந்தால் கமிஷன் கிடைக்கும் என்று கூறினார். 

பிறகு என்னை அவர்களது டெலிகிராம் குழுவில் இணைத்து விட்டார். பின்னர் ஒரு இணையதள லிங்கை அனுப்பி அதில் தனது விவரங்களை பதிவு செய்தால் தான் கமிஷன் கிடைக்கும் என்றார். அதனை உண்மை என நம்பிய நானும் அவர் சொன்னது போல் பதிவு செய்தேன். அப்போது முதற்கட்டமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்ந்ததற்காக ரூ.210 கமிஷனாக அனுப்பினார். 

இதையடுத்து நான் ரூ.1000 முதலீடு செய்தேன். அதில் கமிஷன் என கூறி ரூ.1410 எனது வங்கி கணக்குக்கு வந்தது. இதனால் பண ஆசையில் மேலும் ரூ.5000 முதலீடு செய்தேன். எனக்கு ரூ.6420 கமிஷனாக கிடைத்தது. இதையடுத்து சிறிது சிறிதாக மொத்தம் ரூ.18,30,000 வரை முதலீடு செய்தேன். ஆனால் அவர் எனக்கு கமிஷன் தரவில்லை. 

எனவே சந்தேகமடைந்த நான் அவரை தொடர்புகொள்ள முயற்சி செய்தேன். ஆனால் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் எனது பணத்தை வங்கி கணக்கில் வரவு வைக்க முடியாததால் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். என்னை ஏமாற்றிய நபரை கண்டுபிடித்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

இதுகுறித்த புகாரின் பேரில் கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...