தனியார் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை கொண்டு தமிழ் கற்றுத்தர வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுறுத்தல்!

கோவை, ஈரோடு, நாமக்கல், நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 350 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் வழங்கும் நிகழ்வில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்களை கொண்டு தமிழ் கற்றுத்தர வேண்டும் என அறிவுறுத்தினார்.



கோவை: கோவை, ஈரோடு, நாமக்கல், நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த 350 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார். 

தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் 12,631 மெட்ரிகுலேசன் பள்ளிகள். மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகள் சுயநிதி உயர்நிலை பள்ளிகள், சுயநிதி மேல்நிலைப் பள்ளிகள் மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகள், இளம் மழலையர் பள்ளிகள் மற்றும் மாநிலப் பாடத்திட்டம் அல்லாத பிற வாரியப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 

இவ்வகையான் தனியார் பள்ளிகள் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பள்ளியின் அங்கீகாரத்தினைப் புதுப்பித்து ஆணை பெற்று செயல்பட்டு வருகின்றன. 

மாநில பாடத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகள் பயன்பெறும் வகையில் மண்டல வாரியாக அங்கீகாரச் சான்றுகளைப் புதுப்பித்து ஆணை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

முதற்கட்டமாக திருச்சி, அரியலூர், திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் உள்ளடக்கிய பத்து மாவட்டங்களைச் சார்ந்த தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரச் சான்றுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி திருச்சியில் வழங்கினார்.



இதனைத் தொடர்ந்து கோவை, ஈரோடு நாமக்கல், நீலகிரி மற்றும் திருப்பூர் உள்ளடக்கிய ஐந்து மாவட்டங்களைச் சார்ந்த 350 தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கோவை, வெங்கடேசபுரம், புவனேஷ்வரி நகரில் உள்ள அவிலா கான்வென்ட் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியில் அங்கீகார ஆணைகள் வழங்கப்பட்டது.



இவ்விழாவில், தனியார் பள்ளிகள் இயக்குநர் முனைவர்.எஸ்.நாகராஜ முருகன் வரவேற்புரையுடன், கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு அங்கீகார ஆணைகளை வழங்கினார். 



இந்த நிகழ்வில், அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது, 5 மாவட்டங்கள் 350 தனியார் பள்ளி நிர்வாகிகள் தாளாளர்கள் வந்து உள்ளனர். மாணவிகள் அழகான பேண்ட் வாத்தியங்கள் வாசித்துக் காட்டினர், இதை எங்கும் நான் பார்த்ததில்லை. நல்ல வரவேற்பு வழங்கினார்கள். 

எந்த பள்ளியிலும் இதுபோன்று நான் கண்டதில்லை. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணை ஜூன் 30-ம் தேதி திருச்சி மாவட்டத்தில் 10 மாவட்டங்கள் உள்ளடக்கிய பள்ளிகளுக்கு இந்த ஆணையை வழங்கினோம்.



22 - 23 அங்கீகார ஆணை முடிவுற்ற நிலையில் உள்ள பள்ளிகள் உடனடியாக விண்ணப்பம் செய்யுங்கள். கல்விப் பணி அனைத்திற்கும் மேலானது. மாணவ செல்வங்களை நல்ல மனிதனாக ஆக்குவது பள்ளிக்கூடங்கள். அப்படிப்பட்ட இந்த பள்ளிகளுக்கு ஆணை வழங்குவது எனக்கு பெருமையாக உள்ளது. 

அரசு பள்ளி மேம்படுத்துவது என்றாலும், தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் எங்கள் மாணவர்கள் தான், அதனால் தான், தனியார் பள்ளிகளையும் கவனம் செலுத்துகின்றோம். ஒரு சில பள்ளிகளில் மாணவர்கள் திரைப்படத்தின் மூலமாக கருத்தை பெற்று வருகிறார்கள். 



தனியார் பள்ளியில் தமிழ் மொழிகள் கற்றுத் தர வேண்டும். தமிழ் மொழியை தனியார் பள்ளிகளில் கொண்டு செல்ல நீங்கள் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். பீஸ் கட்ட முடியவில்லை என்றால் ஒரு சில பள்ளிகள் தவறாக பயன்படுத்தும் பொழுது அனைத்து பள்ளிகளும் பதில் சொல்கிறது அதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். ஒவ்வொரு திட்டத்தையும், இல்லாமல், அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றோம்.

இவ்வாறு அவர் பேசினார்.



தொடர்ந்து, அங்கீகார ஆணைகளை பள்ளித் தாளாளர்கள் மற்றும் பள்ளி முதல்வர்களிடம் அமைச்சர் வழங்கினார். 



இந்நிகழ்ச்சியில் மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், எம்பி சண்முக சுந்தரம், துணை மேயர் வெற்றிசெல்வன், திமுக மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், தனியார் மெட்ரிக் பள்ளிகளின் சங்க தலைவர் ஆரோகிய ததயூஸ், தனியார் பள்ளிகள் இயக்கக இணை இயக்குநர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தனியார் பள்ளிகள்) மற்றும் தனியார் பள்ளிகளின் சங்க பிரதிநிதிகள் பெருமளவில் கலந்து கொண்டனர். 

இறுதியாக கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுமதி அவர்கள் நன்றியுரையாற்றினார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...