பாஜகவின் உளவாளியாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருகிறார் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சனம்!

செந்தில் பாலாஜியின் இலாகாக்களை பிரித்து கொடுத்ததை ஆளுநர் ஏற்காதது அதிகபிரசிங்கி தனமானது மட்டுமல்ல அயோக்கியத்தனமானது என்றும், ஆளுநர் ஆர்.என்.ரவி தான் ஒரு மத்திய அரசு ஊழியர் என்பதை மறந்து, முதலமைச்சரை போல் செயல்படுவதாகவும் வைகோ குற்றம்சாட்டினார்.



கோவை: பாஜகவின் உளவாளியாக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார். 

கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் பேசியதாவது, 







தமிழக வரலாற்றிலேயே இரக்கமற்ற மூர்க்கத்தனமான தான்தோன்றித்தனமான ஒரு ஆளுநர், ஆர்.என்.ரவி என்ற பெயரிலே இங்கு வந்து ஆட்டம் போட்டு கொண்டிருக்கிறார். தமிழக முதலமைச்சருக்கு தான் யாரை எந்த இலாகாவில் அமைச்சராக்குவது என்ற அதிகாரம் உள்ளது.

செந்தில் பாலாஜியின் இலாகாக்களை பிரித்து கொடுத்ததை ஆளுநர் ஏற்காதது அதிகபிரசிங்கி தனமானது மட்டுமல்ல அயோக்கியத்தனமானது. தமிழகத்தில் ஆட்சியை சீர்குலைக்க எந்தளவிற்கு முடியுமோ அந்தளவிற்கு மத்திய சர்க்காரின், பாஜகவின் உளவாளியாக, ஏஜெண்டாக செயல்பட்டு கொண்டிருக்கிறார் ஆர்.என்.ரவி. 

சட்டத்திற்கு விரோதமாக அவர் வகிக்கும் அதிகாரத்திற்கு விரோதமாக எல்லாம் பேசி கொண்டிருக்கிறார். முதல்வரை போல் செயல்படுகிறார். மக்கள் முதலமைச்சராக தேர்ந்தெடுத்தது ஸ்டாலினைத்தானே தவிர ஆர்.என் ரவியை அல்ல. அவர் ஒரு மத்திய சர்க்காரின் ஊழியர், முதல்வர் அல்ல. 

தான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதை போல செயல்படுகிறார். மத்திய சர்க்காரின் வேலைக்காரர் ஒரு ஊழியக்காரர் என்பதை ஆளுநர் மறந்து விடக்கூடாது. மத்திய அரசு எல்லா இடங்களிலும் பாஜகவை கொண்டு வர முயல்கிறார்கள். ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பட்டு இந்தியாவை கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு சர்வாதிகாரத்தை நரேந்திர மோடி அரசு நிலைநாட்ட நினைக்கிறது அதில் தோற்றுப் போவார்கள்.

இவ்வாறு வைகோ தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 49 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்...

இதர பிற்படுத்தப்பட்டோர் மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவர்களுக்கு மத்திய அரசின் PM...

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (02.09.2026) மின்தடை

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 2ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...