கோவை தெற்கு எம்.எல்.ஏ அலுவலகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நபர் உயிரிழந்து கிடந்ததால் பரபரப்பு!

கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் புகுந்து, கதவை சாத்திக்கொண்ட நபர் வெளியேற்றப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் அந்த மர்மநபர் சாலையோரத்தில் உயிரிழந்து கிடந்தது தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: கோவை தெற்கு எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் அத்துமீறி சென்றதால் வெளியேற்றப்பட்ட நபர், சிறிது நேரத்தில் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பந்தய சாலை காவல் நிலையம் அருகில், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அந்த அலுவலகத்தை பயன்படுத்தி வருகின்றார். 

நேற்று மாலை 5:50 மணி அளவில் சட்டமன்ற அலுவலகத்திற்குள் நுழைந்த நபர் ஒருவர் அறையின் கதவுகளை உட்புறமாக பூட்ட முயன்றார். கதவை சாத்திய மர்மநபரை சட்டமன்ற அலுவலகத்தில் இருந்த விஜயன் பிடித்து வெளியேற்றினார். 



மேலும் இரவு 8.30 மணி அளவில் கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்திற்குள் மர்மநபர் புகுந்தது குறித்து பந்தய சாலை காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். சட்டமன்ற அலுவலகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 



இதனிடையே அண்ணா சிலை சிக்னல் அருகே அலுவலகத்திற்குள் புகுந்த நபர் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடக்கும் தகவல் காவல்துறையினருக்கு கிடைத்தது . குடிபோதையில் இருந்த அந்த நபர் மீது வாகனம் மோதி உயிரிழந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் உடலை கைப்பற்றி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

வானதி சீனிவாசன் சட்டமன்ற அலுவலகத்திற்கு நுழைந்த மர்ம நபர் யார் என்பது குறித்தும், எதற்காக அலுவலகத்திற்குள் நுழைந்தார் என்பது குறித்தும், அவர் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...