பல்லடம் பத்திரப்பதிவு அதிகாரிகளை கண்டித்து வேலை நிறுத்தம் அறிவித்த பத்திரப்பதிவு எழுத்தாளர்கள் சங்கம்!

திருப்பூரிலிருந்து சமீபத்தில் பல்லடத்திற்கு மாறுதலாகி வந்த பத்திர பதிவாளர்களான பிரவீனா, ஈஸ்வரி ஆகியோர் வந்த பின் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனை கண்டித்து வரும் ஜூன் 12 ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக பத்திரப்பதிவு எழுத்தாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.



திருப்பூர்: பல்லடம் பத்திரப்பதிவு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதை கண்டித்து, வரும் 12ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக பத்திரப்பதிவு எழுத்தாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பத்திரப்பதிவு அலுவலகத்தின் கீழ் 39 கிராமங்கள் அடங்கியுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் பத்திரப்பதிவு மூலம் அதிகப்படியான வருவாய் தரும் பகுதிகளில் பல்லடமும் ஒன்று. 

பத்திர பதிவாளர்களான பிரவீனா, ஈஸ்வரி ஆகியோர் சமீபத்தில் திருப்பூரில் இருந்து பணி மாறுதலாகி பல்லடம் வந்துள்ளனர். இவர்கள் வந்த பின் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக பத்திர எழுத்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 



இது தொடர்பாக புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் வரும் ஜூன் 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை ஒரு வாரம் பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்வதில்லை என பல்லடம் பகுதி பத்திர ஆவண எழுத்தர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதுகுறித்து பத்திர எழுத்தாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது, 







பல்லடம் பகுதியில் நூற்றுக்கும் அதிகமான பத்திர ஆவண எழுத்தர்கள் உள்ளனர். சமீப காலமாக தேவையற்ற காரணங்களை கூறி பத்திரங்களை நிராகரிப்பதும், பதிவு செய்யாமல் திருப்பி அனுப்புவதுமான செயல்களில் பத்திரப்பதிவு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

பத்திரங்களின் மதிப்புக்கு ஏற்ப லஞ்சம் நிர்ணயிக்கப்பட்டு கட்டாயமாக்கப்படுகிறது. முதல்வர் தனிப்பிரிவு, பத்திரப்பதிவு ஐஜி, பதிவுத்துறை அமைச்சர், மாவட்ட பதிவாளர், லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் அளித்தும் லஞ்சம் வாங்குவது குறைந்த பாடில்லை. 

எனவே பத்திரப்பதிவு அதிகாரிகளின் செயல்பாடுகளை கண்டித்து நாளை மறுநாள் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை ஒரு வாரத்திற்கு பத்திரப்பதிவு பணிகள் மேற்கொள்ளப்படாது என தீர்மானித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அடுத்த கட்ட போராட்டத்தை அறிவிப்போம். எங்களது போராட்டத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.15 லட்சம் வரை அரசுக்கு வருமான இழப்பு ஏற்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...