கோவையில் 2 புதிய மகளிர் காவல்நிலையங்களை திறந்து வைத்த டிஜிபி சைலேந்திரபாபு!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி மற்றும் வால்பாறை ஆகிய 2 பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அமைக்கப்பட்ட 2 புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்களை தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.

கோவை: கோவை மாவட்டத்தில் 2 புதிய அனைத்து மகளிர் காவல் நிலையத்தை காணொலி காட்சி வாயிலாக தமிழக காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு திறந்து வைத்தார்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி மற்றும் வால்பாறை பகுதியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஏற்படுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.



இந்நிலையில், கோரிக்கையை ஏற்று மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை சரக டிஐஜி விஜயகுமார்  மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயாணன்  ஆகியோர் பரிந்துரையின் பேரிலும், தமிழக முதல்வர்  உத்தரவின் பேரிலும், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி மற்றும் வால்பாறை ஆகிய பகுதிகளில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டது.



இந்த காவல் நிலையங்களை காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு, காணொலி காட்சி மூலம் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர், கோவை சரக  டிஐஜி விஜயகுமார், மற்றும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பத்ரிநாராயணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இந்நிகழ்வில் கருமத்தம்பட்டி மற்றும் வால்பாறை உட்கோட்ட‌ துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவலர்கள், மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் உள்ள ஆறு உட்கோட்டங்களிலும் மகளிர் காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

இதன் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...