யோகாவில் அசத்தும் கோவையை சேர்ந்த 8 வயது சிறுவன்!

கோவை அன்னூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீசாய் குரு என்ற 8 வயது சிறுவன், கடந்த பத்து மாதங்களில் சர்வதேச மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு யோகா போட்டிகளில் கலந்து கொண்டு 23 பதக்கம் மற்றும் கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளார்.



கோவை: கோவையை சேர்ந்த எட்டு வயது சிறுவன் பத்து மாதங்களில் 23 தேசிய, சர்வதேச யோகா போட்டிகளில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளார். 

கோவையை அடுத்த அன்னூர் பகுதியை சேர்ந்தவர்கள் பிரபாகரன்-கிருத்திகா தம்பதி. இவர்களது இளைய மகன் ஸ்ரீசாய் குரு (8) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். 

ஸ்ரீசாய், கடந்த பத்து மாதங்களாக பிரபல யோகா சாதனை மாணவி வைஷ்ணவியிடம் யோகா பயிற்சி எடுத்து வருகிறார்.



இந்நிலையில் யோகாவை விரைவாக கற்று கொண்ட சிறுவன், யோகாவின் மிக கடினமான விருட்ச விருட்சிகம், கண்ட பெருண்டம், சப்த திம்பாசனம், சக்ர பந்தாசனம் போன்ற ஆசனங்களை கற்று கொண்டுள்ளார். 



ஆரம்ப கட்ட பயிற்சி நேரங்களிலேயே தேசிய, சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்ட ஸ்ரீ சாய், இதுவரை சுமார் 23 போட்டிகளில் கலந்து கொண்டு அனைத்து போட்டிகளிலும் பெரும்பாலும் முதல் பரிசையும் வென்றுள்ளார்.

இவரது அசாத்தியமான சாதனைகளை பாராட்டி மதுரை தமிழ்ச்சங்கம், கோவை மாவட்ட நடிகர் சங்கத்தினர் என பல்வேறு அமைப்பினர் விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளனர்.



பத்து மாதங்களில் 23 பதக்கம் மற்றும் கோப்பைகளை வென்று குவித்துள்ள சிறுவனுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...