மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாக கோவையில் பல்வேறு அமைப்பினர் போராட்டம்!

டெல்லியில் நீதி கேட்டு போராடி வரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவாகவும், அவர்களை தாக்கி கைது செய்த டெல்லி போலீசாரை கண்டித்தும், கோவையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு SFI, DYFI, அனைத்திந்திய ஜனநாயக மாத சங்கம் என பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவாகவும், அவர்களை தாக்கிய டெல்லி காவல்துறையை கண்டித்தும் கோவையில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து அவரை கைது செய்து உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி பல நாட்களாக டெல்லியில் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் அண்மையில் புதிதாக திறக்கப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி திரளாகச் சென்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பாஜக எம்பி மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இது குறித்து பல்வேறு விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில் மல்யுத்த வீரர், வீராங்கனைகளை கைது செய்த டெல்லி காவல் துறையை கண்டித்தும் பாஜக எம்பி யை கைது செய்ய வலியுறுத்தியும் கோவையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.



மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் SFI, DYFI, அனைத்திந்திய ஜனநாயக மாத சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாக பாஜக எம் பி யை கைது செய்ய வேண்டும் எனவும் அவரிடம் உரிய விசாரணை மேற்கொள்ள பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...