ஐடி ரெய்டு முடிந்து அறிக்கை வெளியிடும் போது அனைவரும் கதறுவார்கள்..! - கோவை வடக்கு அதிமுக எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுணன் சூசகம்!

திமுக அரசை கண்டித்து தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற கோவை வடக்கு எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனன், வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்த அவர், வருமான வரித்துறை சோதனை முடிந்து அறிக்கை வெளியாகும் போது அனைவரும் கதறுவார்கள் என சூசகமாக தெரிவித்தார்.



கோவை: வருமான வரித்துறை சோதனை முடிந்து அறிக்கை வெளியாகும் போது அனைவரும் கதறுவார்கள் என கோவை வடக்கு எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுனன் தெரிவிவித்துள்ளார்.



கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில், கள்ள சாராயம், போதைப் பொருட்கள் புழக்கம் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் இந்த ஆட்சியில் நடைபெறுவதாக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.



இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாநகர மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏவுமான அம்மன் அர்ச்சுனன் தலைமை வகித்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன், முன்னாள் மேயர் வேலுச்சாமி உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 



இந்த ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அம்மன் அர்சுணன்,



இந்த இரண்டரை ஆண்டு காலத்தில் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது? அதுவரை வந்த வருமானம் எத்தனை என்பதை அரசு தெரியப்படுத்த வேண்டும். வருமான வரித்துறை அதிகாரிகளையே அடிக்க செல்லும் தைரியம் அவர்களுக்கு (திமுக) தான் உள்ளது. 

நாங்கள் ஏதாவது செய்தால் தமிழக அரசு எங்களை கைது செய்யும் போது, டெல்லி அரசாங்கம் இன்னும் ஏன் காத்துக் கொண்டிருக்கிறது. மேலும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்துதல் என்ற சட்டம் தற்போது எங்கே சென்றது?. வருமானவரித் துறை சோதனைக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என அமைச்சர் கூறுகையில் எதற்காக அவரது தம்பியின் வீட்டில் சோதனை நடத்தப்படும் பொழுது அதிகாரிகளை தாக்கினார்கள்?. 

இன்னும் 10 நாட்களில் சோதனை விவரங்கள் எல்லாம் தெரியவரும், அப்போது அனைவரும் கதறுவார்கள். திமுகவின் தோழமை கட்சிகளுக்கு எல்லாம் மாதம் மாதம் கப்பம் வருவதால் அமைதியாக இருக்கிறார்கள். வைகோ எல்லாம் எங்கே சென்றார்?.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...