கோவையில் மோப்ப நாய்களுக்கு சிறப்புப் பயிற்சி - பயிற்சியாளராக 2 பெண் போலீசார் நியமனம்!

தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக கோவையில் மோப்ப நாய்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது. இவற்றிற்கு பயிற்சி அளிக்கும் பணியில், தேனி மற்றும் திருப்பூரைச் சேர்ந்த பெண் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.



கோவை: தமிழகத்தில் முதல் முறையாக மோப்ப நாய்களுக்கு பயிற்சியளிக்க 2 பெண் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாநகர காவல் துறையில் துப்பறியும் மோப்ப நாய் பிரிவு கடந்த 1965-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2001-ம் ஆண்டு முதல் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் சிறப்பு மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது 7 மோப்ப நாய்கள் உள்ளன.

போதை பொருட்களை கண்டறிவதற்காக கோவைக்கு தற்போது புதிதாக பெல்ஜியம் மெலானாய்டு வகையை சேர்ந்த மதனா என பெயரிடப்பட்ட 8 மாதம் ஆன மோப்ப நாய் சேர்க்கப்பட்டதால் மோப்ப நாய் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்து உள்ளது. இதுதவிர திண்டுக்கல், பாளையங்கோட்டை மத்திய சிறை உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10 மோப்ப நாய்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் கோவை மாநகரில் கொலை, கொள்ளை போன்ற குற்றச் சம்பவங்கள் நடந்தால், அப்பகுதிக்கு மோப்ப நாய் கொண்டு செல்லப்பட்டு, துப்பறியும் பணியை போலீசார் மேற்கொள்கிறார்கள். மேலும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் போன்ற பணிகளிலும் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்படுகின்றன.

சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அம்பலவாணன் தலைமையில் இந்த பிரிவு இயங்குகிறது. மோப்ப நாய்கள் தங்குவதற்கும், உலாவுவதற்கும் விசாலமான இடவசதி உள்ளது. அத்துடன் மோப்ப நாயுடன் பயிற்சிக்கு வரும் போலீசார் தங்குவதற்கு இடம், கழிவறை, தண்ணீர் வசதி செய்யப்பட்டு உள்ளது.

இங்குள்ள போலீஸ் மோப்ப நாய் பயிற்சி பிரிவில் கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து தற்போது ஆண் போலீசார் மட்டுமே மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக கோவை மோப்ப நாய் பிரிவில் நாய்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஆயுதப்படை பிரிவில் பணியாற்றிய திருப்பூரை சேர்ந்த கவிப்பிரியா (25), தேனியை சேர்ந்த பவானி (26) ஆகிய 2 பெண் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர்.



அவர்கள் வில்மா என்ற பெயர் கொண்ட லேப்ரடார் வகை நாய், பெல்ஜியம் மெலானாய்டு நாய் உள்ளிட்ட மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள். இதுகுறித்து கவிப்பிரியா, பவானி ஆகியோர் கூறியதாவது, நாங்கள் கடந்த 2022-ம் ஆண்டு கோவை மாநகர ஆயுதப்படை பிரிவில் பணியில் சேர்ந்தோம்.

நாங்கள் ஏற்கனவே வீடுகளில் நாய்களை வளர்த்து வருகிறோம். இதனால் எங்களுக்கு நாய்கள் மீது அலாதி பிரியம் உண்டு. கோவையில் முக்கிய பிரமுகர்கள் வரும் போது மோப்ப நாய்களை கொண்டு சோதனை செய்வதை பாதுகாப்புக்கு சென்ற இடத்தில் பார்த்து உள்ளோம்.

அப்போது நாய்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட நாங்களும் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக மோப்ப நாய் பிரிவில் சேர வேண்டும் என்று எண்ணினோம். இதற்கிடையே தான் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் போலீஸ் மோப்ப நாய் பிரிவில் சேர பெண் போலீசாரிடம் ஆர்வம் உள்ளதா என்று கூறி இருந்தார்.

இதையடுத்து நாங்கள் எங்களின் ஆர்வத்தை கூறினோம். அதன்படி தற்போது மோப்ப நாய் பிரிவில் சேர்ந்து நாய்களுக்கு அதிகாரிகளின் சொல்லுக்கு கீழ்ப்படிதல், போதை பொருட்களை கண்டறிவது, கொலை, கொள்ளை சம்பவங்களில் துரத்திச்சென்று மோப்பம் பிடிப்பது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினா்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...