கோவை அருகே குடிபோதையில் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கிய இருவர் கைது

கோவை மாவட்டம் வேடப்பட்டியில் மதுபோதையில் அரசு பேருந்து ஓட்டுநர் விஜயகுமார்(48) மற்றும் நடத்துநரை தாக்கிய பூச்சியூரை சேர்ந்த ராகவன் (20), சுண்டபாளையத்தை சேர்ந்த கார்த்திக் (20) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


கோவை: வேடப்பட்டியில் அரசுப்பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் வேடப்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார் (48). இவர் அரசுப் போக்குவரத்து கழகம் உக்கடம் கிளையில் ஓட்டுநராக உள்ளார். சம்பவத்தன்று இவர் டவுன்ஹாலில் இருந்து குப்பேபாளையம் நோக்கி சென்ற அரசு பேருந்தை ஓட்டிச் சென்றார்.

பேருந்து கலிக்கநாயக்கன் பாளையம் அருகே வளைவில் சென்ற போது 3 பேர் மது போதையில் சத்தம் போட்டபடி நடுரோட்டில் வந்தனர். இதனைப் பார்த்த ஓட்டுநர் விஜயகுமார் ஹாரன் அடித்தார்.

ஆனால் அவர்கள் ரோட்டை விட்டு விலகாமல் தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். காயமடைந்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்றனர்.

பின்னர் இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துநரை தாக்கிய பூச்சியூரை சேர்ந்த ராகவன் (20), சுண்டபாளையத்தை சேர்ந்த கார்த்திக் (20) ஆகியோரை கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட 2 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...