தென்னை மரங்களில் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை முன்னெடுப்பு - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்!

பொள்ளாச்சி அடுத்த மூலனூரில் நடைபெற்ற கருத்தரங்கை தொடங்கி வைத்த அமைச்சர் சாமிநாதன், தென்னை மரங்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் கட்டுப்படுத்துவது குறித்த கையேடுகளை விவசாயிகளுக்கு வழங்கிய பின், தென்னை மரங்களில் ஏற்படும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.



கோவை: தென்னை மரங்களில் ஏற்படும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி அருகேயுள்ள மூலனூர் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் தென்னை நோய் மற்றும் பூச்சி தாக்குதல் கட்டுப்பாடு மற்றும் உர மேலாண்மை கருத்தரங்கம் நடைபெற்றது..

கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்தார். பின்னர், தென்னை மரங்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் கட்டுப்படுத்துவதை குறித்து கையேடுகளையும் விவசாயிகளுக்கு வழங்கினார்.

மேலும் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் விஞ்ஞானிகள் கலந்து கொண்டு தென்னை மரங்களில் ஏற்படும் பூச்சி தாக்குதல் மற்றும் நோய் தாக்குதலை கட்டுப்படுத்தவது குறித்து செயல் விளக்கத்துடன் விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது,



கொங்கு மண்டலத்தில் கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு, போதிய விலை இல்லை போன்ற காரணத்தால் குறுகிய கால பயிர் சாகுபடியில் கட்டுபடியாகாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தென்னை சாகுபடி மூலம் விவசாயிகளின் வாழ்வாதரத்தை பெருக்கும் வகையில் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது, தென்னை சாகுபடியில் ஏற்படும் பூச்சி தாக்குதல், வாடல் நோய்களை ஒழிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான இலக்கை எட்டுவோம்.

இவ்வாறு அமைச்சர் சாமிநாதன் கூறினார்.

Newsletter

நினைத்ததை சாதிக்கும் செயல்வீரர் செந்திலபாலாஜி - கோவையில் முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

கோவையில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், மின்துறை அம...

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...