கோவையில் கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி பலியான சோகம்!

கோவை மாவட்டம் பீளமேடு அடுத்த நேரு நகரில் வீடு இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இளங்கோ என்பவர் மீது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


கோவை: பீளமேடு அருகே வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி கட்டிட தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் இளங்கோ (36). இவர் கோவை பீளமேடு அடுத்த நேரு நகரில் குடும்பத்துடன் தங்கியிருந்து கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இளங்கோ நேரு நகர் அடுத்த ஐானகியம்மாள் நகரில் உள்ள ஒரு வீட்டை இடிக்கும் பணியை மேற்கொண்டு வந்தார்.

அப்போது திடீரென மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி இளங்கோ பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து பீளமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த இளங்கோவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் இளங்கோவை பணி செய்ய வைத்ததாக கட்டிட உரிமையாளர் வெங்கடேஷ், கட்டிட கான்டிராக்டர் மூர்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...