விளைநிலங்களை சேதப்படுத்தும் மக்னா காட்டு யானை - பொள்ளாச்சியில் தென்னை விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

பொள்ளாச்சி அடுத்த சரளபதியில் வனத்தை விட்டு வெளியேறி விளைநிலங்களில் புகுந்து தென்னை மற்றும் மா மரங்களை சேதப்படுத்தி, மக்களை அச்சுறுத்தி வரும் மக்னா காட்டு யானையை பிடித்து வேறு வனப்பகுதிக்குள் விட வலியுறுத்தி, வேட்டைக்காரன் புதூர் பகுதியில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: பொள்ளாச்சி அருகே விளைநிலங்களை சேதப்படுத்தி வரும் மக்னா காட்டு யானையை பிடிக்க வலியுறுத்தி வேட்டைக்காரன் புதூர் பகுதியில் தென்னை விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டத்தில் மயக்க ஊசி செலுத்தி பிடித்துக் கொண்டு வரப்பட்ட மக்னா காட்டு யானை வால்பாறை வனசரகம் மானாம்பள்ளி மந்திரி மட்டம் அடர் வனப்பகுதியில் விடப்பட்டது.

54 நாட்கள் கழித்து பொள்ளாச்சி வனச்சரகம் சரளபதி பகுதியில் மக்னா யானை முகாமிட்டு கடந்த 25 நாட்களாக அப்பகுதியில் உள்ள தென்னை மற்றும் மா மரங்களை சேதப்படுத்தியும் அப்பகுதி மக்களை அச்சுறுத்தியும் வந்தது.

இதனையடுத்து அந்த யானை விவசாய தோட்டத்துக்கு வராமல் இருக்க டாப்சிலிப் யானைகள் வளர்ப்பு முகாமில் இருந்து சின்னத்தம்பி, முத்து, ராஜவரதனன் என மூன்று கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டு வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.

ஆனால் வனத்துறைக்கு போக்கு காட்டிய மக்னா இரவு நேரத்தில் வெளியேறி மூன்று கும்கி யானைகளுடன் நட்பாக பழகி கும்கி யானைகளுக்கு வைக்கப்படும் உணவுகளை உட்கொண்டு சுற்றி திரிந்தது. இதனால் அப்பகுதியில் இருந்த கும்கி யானைகளை வனத்துறையினர் மீண்டும் டாப்ஸ்லிப் வளர்ப்பு முகாமுக்கு திரும்ப கொண்டு சென்றனர்.



ஆனால் மக்னா யானை தற்போது மீண்டும் வனப்பகுதியை விட்டு வெளியேறி விலை நிலங்களை சேதப்படுத்தியும் மக்களையும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் மக்களுக்கு உயிர் சேதம் ஏற்படுவதற்குள் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர், மேலும் வனத்துறை அலட்சியத்தை கண்டித்து சரளபதி பொதுமக்கள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வேட்டைக்காரன்புதூர் பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்னா யானையை விரைந்து பிடித்து வன பகுதியில் விட வேண்டும் என வலியுறுத்தியும் வனத்துறை அதிகாரிகளை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

தமிழக அரசும் வனத்துறையும் கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...