தென் மாநிலங்களில் பாஜக புறக்கணிக்கப்பட்டது போல் வடக்கிலும் விரைவில் நடக்கும் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நம்பிக்கை!

கோவை சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறும் அரசு பொருட்காட்சியை துவக்கி வைத்த அமைச்சர் சாமிநாதன், விழிப்புணர்வு ஏற்பட தென் மாநிலங்களில் பாஜக புறக்கணிக்கப்பட்டுள்ளது போல் வடமாநிலங்களிலும் பாஜக புறக்கணிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.



கோவை: தென் மாநிலங்களில் பாஜக புறக்கணிக்கப்பட்டது போல் விழிப்புணர்ச்சி ஏற்பட ஏற்பட வடக்கிலும் பாஜக புறக்கணிக்கப்படும் என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.



கோவை மாநகராட்சி சிறைச்சாலை அணி வகுப்பு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு பொருட்காட்சியை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்து பார்வையிட்டார்.



குறிப்பாக அங்கு காவல்துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த அரங்கை பார்வையிட்டார்.



பின்னர், அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த துப்பாக்கி, உட்பட நவீன கருவிகளை பார்வையிட்டு அதன் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.



அங்கு காவல்துறை உட்பட பல்வேறு துறைகளை சார்ந்த அரங்குகள் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.



குறிப்பாக அங்கு அமைக்கப்பட்டுள்ள கோவை மாநகராட்சி பிரதான அலுவலக மாதிரி, கட்டிடம் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.



மேலும் இந்நிகழ்வில் பல்வேறு துறைகளில் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது, தேர்தல் நேரத்தில் கூறிய வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார். கர்நாடகாவில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் என்பது தமிழ்நாட்டில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் தான். அதைத்தான் காங்கிரசும் பாஜகவும் போட்டி போட்டு அறிவித்தன.

காங்கிரஸ் கர்நாடகத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கப் போகிறது. மற்ற மாநிலங்களுக்கும் வழிகாட்டும் அரசாக திமுக அரசு உள்ளது. ஆட்சி பொறுப்பேற்ற முதல் நாளில் கொரோனா நிதி உதவி, மகளிர்க்கு பேருந்தில் இலவச பயணம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களை முதல் கையெழுத்தாக இட்டவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கொரோனா நோய் தொற்று காலங்களில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்குள் நேரில் சென்று ஆய்வு செய்தவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். அதுமட்டுமின்றி மக்களை தேடி மருத்துவம், புதுமைப்பெண் திட்டம், கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை போன்ற பல்வேறு திட்டங்களை முதல்வர் முன்னெடுத்து வருகிறார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன்,



அரசு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு பணிகள் மக்களுக்கு தெரிவுபடுத்தும் வகையில் அரசு பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அமைக்கப்பட்ட பொருட்காட்சியின் மூலம் 36 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கப் பெற்றது.

இந்த பொருட்காட்சிகளின் மூலம் அரசு திட்டங்களை எவ்வாறு பெறுவது என்ற விவரங்கள் மக்களுக்கு தெரிய வரும். கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், பாஜக மத ரீதியாக மக்களை மூளை சலவை செய்து ஆட்சியை பிடித்திருந்தார்கள். அதிலிருந்து மக்களுக்கு எப்போது தெளிவு கிடைக்கிறதோ பிஜேபிக்கு இதுபோன்ற சூழ்நிலை நிச்சயமாக ஏற்படும். அதற்கான காலம் துவங்கி இருப்பதாக எண்ணுகிறேன்.

பேருந்தில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம், மகளிர் உரிமைத் தொகை போன்றவற்றை எல்லாம் தான் காங்கிரஸ் கர்நாடகாவில் முன்னெடுத்து வைத்தது, அதன் காரணமாகத்தான் காங்கிரஸ் மீது மக்களுக்கான நம்பிக்கை வலுத்து, பிஜேபியின் மீது அவமதிப்பும் தேர்தலில் எடுபட்டது.

தொடர்ந்து இதுபோன்ற நிலைமைகள் படிப்படியாக ஒவ்வொரு மாநிலத்திற்கும் வரும். தென்மாநிலங்களில் பாஜக புறக்கணிக்கப்பட்டது போல் விழிப்புணர்வு ஏற்பட ஏற்பட வடக்கிலும் அந்த சூழ்நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக கோவை மாநகராட்சி வ.உ.சி மைதானத்தில் வைக்கப்பட்டு உள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா ஆனந்த் குமார், துணை மேயர் வெற்றிச்செல்வன் உட்பட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...