கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி - வால்பாறையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.



கோவை: கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து, வால்பாறையில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் பாஜகவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.



இந்நிலையில், வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியின் சார்பில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.



இந்த நிகழ்வில், நகரச்செயலாளர் கலைவாணன் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.வி.பேபி நிர்வாகிகள் பிரபாகரன், யூ.கருப்பையா, குசலவன், அலி,சோடாசெந்தில், சிவலிங்கம், டாக்டர் பவுலோஸ், சண்முகவேல் ஆகியோர் முன்னிலையில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் அலி, அசீஸ், ரஹ்மான்,செபீர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...