ஊட்டியில் கூடுதல் கழிப்பிடங்களை அமைத்திடுக..! - சுற்றுலா பயணிகள் அவதி

நீலகிரி மாவட்டத்தில் இதமான காலநிலை நிலவுவதால் வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. அதற்கேற்ப கழிவறை வசதி இல்லாமல் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.


நீலகிரி: ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கழிவறை இல்லாமல் அவதியடைந்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை, இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

அவர்களுக்கான அடிப்படை தேவைகள் உள்ளதா என்றால் கண்டிப்பாக இல்லை என சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். குறிப்பாக உடல் உபாதைகளை கழிக்க கழிவறைகள் இல்லாமல் தவிக்கின்றனர்.

வாகன நிறுத்தங்களில் இ-கழிப்பறைகள் அவசியம் தேவை. பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள வாகன நிறுத்ததில் வாகன நிறுத்துபவர்கள் கழிப்பிடங்கள் இல்லாமல் திண்டாடி அருகில் உள்ள வீட்டிற்கு சென்று கழிவறையை உபயோகிக்க அனுமதி கேட்டு கெஞ்சிய காட்சிகள் மனதை உறைய செய்கிறது.

சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இ- கழிப்பறைகள் உடனடியாக அமைக்க வேண்டும், ஜி.பி.எஸ் மூலம் கழிப்பறைகள் இருக்கும் இடங்களைக் கண்டுபிடித்து சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.பொதுமக்களின் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டி, பொது இடங்களில் நிறுவப்படும் கழிப்பறைகளே இ-கழிப்பறைகள் எனப்படுகின்றன.

தண்ணீரை சிக்கனப்படுத்தவும், சுகாதாரத்தைப் பேணும் வகையிலும் அமைத்து இந்த இ- கழிப்பறைகளை பெண்கள் எளிதாக அடையாளம் காணும் வகையில் தனியாக வா்ணம் பூசப்படவேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் செப். 24-ல் நேரடி மாணவர் சேர்க்கை

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தனியார் இணைப்புக் கல்லூரிகளில் காலியாக உள்ள இளமறிவியல் இடங்களை நிரப்ப நேரடி மாணவர...

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம்

கோவை மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத்தின் 14-வது மகாசபைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், ப...

தேசிய அளவிலான சிறிய ரக ரேஸ் கார் பந்தயத்தில் கோவை ஈ.ஏ.எஸ்.ஏ., கல்லூரி மாணவர்கள் அணி இரண்டாமிடம்

கோவை நவக்கரையில் உள்ள ஈ.ஏ.எஸ்.ஏ., என்ஜினீயரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மெக்கானிக்கல் என்ஜினீயரிங் இரண்டாமாண்டு மாண...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...