தாராபுரத்தில் பாஜக நிர்வாகிகளிடையே மோதல் - வைரலாகும் வீடியோ

தாராபுரத்தில் மன் கி பாத் நிகழ்ச்சியின்போது பாஜக நிர்வாகிகள் இருவரிடையே ஏற்பட்ட மோதல் கைகலப்பாக மாறியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புதிய பேருந்து நிலையம் எதிரே கொங்கு மெஸ் நிறுவனம் நடத்தி வருபவர் கொங்கு ரமேஷ். இவர் பாரதிய ஜனதா கட்சியில் மாநில நிர்வாகியாக பதவி வகித்துவருகிறார்.

இந்நிலையில் திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் மங்களம் ரவி, புதிய தலைவராக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டார். அப்போது, கொங்கு ரமேஷ் என்பவருக்கும் மங்கலம் ரவி என்பவருக்கும் இடையே மாவட்ட தலைவர் பொறுப்பு பெறுவதில் பிரச்சனை ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக மங்களம் ரவி பதவி பெற்றார். மேலும், அவ்வப்போது மங்கலம் ரவி மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகியான கொங்கு ரமேஷ் என்பவருக்கும் பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று பேருந்து நிலையம் அருகே மனதின் குரல் நிகழ்ச்சி மாநில நிர்வாகி கொங்கு ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. அப்போது கொங்கு ரமேஷுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மனதின் குரல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பேருந்து நிலையத்திற்கு வந்த திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி திடீரென தாக்குதல் நடத்தினார். அப்போது கொங்கு ரமேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்களான இந்து மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் மற்றும் நிர்வாகி மூவரும் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி இடையே மோதல் ஏற்பட்டது.



இந்த மோதல் கைகலப்பாக மாறியது. இதில் இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர் ஈஸ்வரன் மற்றும் நிர்வாகி சங்கர் மற்றும் கொங்கு ரமேஷ் ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.



திருப்பூர் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் மங்களம் ரவிக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதை அறிந்த பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள், தாராபுரம் அரசு மருத்துவமனையில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு மருத்துவமனைக்கு வந்த காவல் கண்காணிப்பாளர் தனராசு தலைமையில் காவல் ஆய்வாளர் மணிகண்டன் முன்னிலையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாஜக நிர்வாகிகளிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...