கோவையில் மழைநீரில் ஆட்டம் போடும் முதியவர் - வைரல் வீடியோ..!

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்திலிருந்து அருவி போல் கொட்டிய மழை நீரில் ஆனந்த குளியல் போட்ட முதியவரின் வீடியோ வைரலாகி வருகிறது.


கோவை: பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் மழைநீரில் முதியவர் குளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் வரை மேம்பால பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சாலைகள் உயரப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் மேம்பாலப் பணிகள் முழுமை பெறாமல் உள்ளதால் மழைநீர் வடிகால் பணிகளும் முடிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று மாலையிலிருந்து இரவு வரை அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக பெரியநாயக்கன்பாளையம் பிரதான சாலையிலுள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.



அதுபோல அண்ணா நகர் பகுதியிலுள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இந்த தகவல் அறிந்ததும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.

தொடர்ந்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உடனடியாக தேங்கிய தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கக்கூறினார். இந்த நிலையில் இன்று பாலத்தின் மீது இருந்த தேங்கிய தண்ணீர் கீழே விழுந்தது.

அருவி போல் அந்த மழை நீர் விழந்ததை பார்த்த அங்கிருந்த முதியவர் ஒருவர் உடனடியாக ஒடி அந்த மழை நீரில் ஆனந்த குளியல் போட்டார். இதனை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர். இது தற்போது கோவையில் வைரலாகி வருகிறது.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...