பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துக..! - கோவை சூலூரில் போக்குவரத்து சங்க ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம்!

ஓட்டுநர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சூலூர் அருகே நீலாம்பூர் எல் அண்ட் டி புறவழிச்சாலையில் வாகன ஓட்டுனர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: ஓட்டுநர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சூலூரில் ஓட்டுனர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சூலூர் அருகே நீலாம்பூரில் எல் அண்ட் டி புறவழிச்சாலையில் தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுநர் சங்க பாதுகாப்பு பேரமைப்பு மற்றும் சமூக நீதி வாகன ஓட்டுநர் தொழிலாளர் தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஓட்டுநர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஒவ்வொரு சுங்கச்சாவடியை கடக்கும் பொழுதும் அங்கு காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஒரு வாகனத்திற்கு இவ்வளவு என நிர்ணயித்து லஞ்சத் தொகை கேட்கின்றனர்.

இந்த லஞ்ச நடவடிக்கையை ஒழிக்க வேண்டும். நீலம்பூர் எல்என்டி புறவழி சாலையை உடனடியாக விரிவாக்கம் செய்திட வேண்டும் என்பன உள்பட 25-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், சமூக நீதி தொழிலாளர் தொழிற்சங்கத்தை சேர்ந்த நந்தகுமார், ஓட்டுநர் உரிமைக்குரல் நுகர்வோர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சரவணன் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி 24x7 குடிநீர் திட்டப் பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகள் தொடக்கம்: மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

கோவை மாநகராட்சியில் 24x7 குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறும் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தியமங்கலம் சாலை, அவினா...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இன்னோவிஷன்-2026 அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் போட்டிகள் நடைபெற்றன

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மாணவர்களின் சிந்தனைத்திறன் மற்றும் ஆய்வுநோக்கை ஊக்குவிக்கும் வகையில் இன்னோவிஷன்-2026 அறிவிய...

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...