முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் யானை தாக்கியதில் பாகன் உயிரிழப்பு!

நீலகிரி மாவட்டம் முதுமலை அருகேயுள்ள யானைகள் வளர்ப்பு முகாமில் வளர்க்கப்பட்டு வந்த மசினி என்ற பெண் யானை திடீரென தாக்கியதில், பாகனாக பணியாற்றி வந்த பாலன் என்பவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


நீலகிரி: முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் வளர்ப்பு யானை தாக்கியதில் பாகன் உயிரிழந்தார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மனிதர்களை தாக்கி கொல்லும் யானைகள் மற்றும் தாயை பிரிந்து தவிக்கும் குட்டி யானைகள் இந்த முகாமிற்கு கொண்டுவரப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கடந்த 2006ஆம் ஆண்டு தாயை பிரிந்த நிலையில் முகாமிற்கு கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்ட மசினி யானை 2013 ஆம் ஆண்டு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வழங்கப்பட்டது.

ஆறு ஆண்டுகளாக கோவிலிலிருந்த மசினி யானை 2019 ஆம் ஆண்டு பாகன் கஜேந்திரனை தாக்கி கொன்றது. இதனை தொடர்ந்து அந்த யானை மீண்டும் முதுமலை வளர்ப்பு முகாமிற்கு கொண்டு வரப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

அந்த யானை தற்போது அபயாராண்யம் முகாமில் இருந்து வரும் நிலையில், இன்று காலை பாகன் பாலன் உணவு அளித்து விட்டு அழைத்து சென்ற போது திடீரென அவரை தாக்கியது. அதில் பலத்த காயமடைந்த பாலன் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் போது பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...

கோவையில் 5வது தென்னிந்திய குலாலர் இன அரசிதழ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் கலந்தாய்வுக் கூட்டம்

கோவை செல்வபுரம் பகுதியில் 5வது தென்னிந்திய அளவிலான குலாலர் இன அரசிதழில் பதிவு பெற்ற அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களின் க...

கோவையில் கத்திமுனையில் சமையல் மாஸ்டர், சாலையோர வியாபாரி, மெடிக்கல் பிரதிநிதியிடம் வழிப்பறி – மூவர் கைது

கோவையில் ஒரே நாளில் நடந்த மூன்று கத்திமுனை மிரட்டல் கொள்ளை சம்பவங்களில் போலீசார் மூவரை கைது செய்தனர். வடமதுரையில் மெடிக்...

கோவையில் அடுத்தடுத்து 2 பைக்குகள் திருட்டு: போலீசார் தீவிர விசாரணை

கோவை மாநகரப் பகுதியில் வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 பைக்குகள் அடுத்தடுத்து மர்ம நபர்களால் திருடு போயுள்ளன...