உடுமலை தனியார் நிறுவனத்தில் ரூ.4 லட்சம் திருடிய முன்னாள் ஊழியர் கைது

உடுமலையில் இயங்கி வந்த தனியார் நிறுவனத்தில் ரூ.4லட்சம் பணத்தை கொள்ளையடித்த அந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான பிரபாகரனை(29) போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


திருப்பூர்: உடுமலையில் தனியார் நிறுவனத்தில் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கத்தை சேர்ந்தவர் பாலாஜி (32). இவர் உடுமலை எலைய முத்தூர் பிரிவில் அரசு கலைக் கல்லூரி செல்லும் வழியில் ஆன்லைன் பொருட்களை வினியோகம் செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

கடந்த 24ஆம் தேதி இரவு வேலையை முடித்துக்கொண்டு நிறுவனத்தை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலை அவர் வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த பாலாஜி உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவுக்குள் இருந்த ரூ.4 லட்சத்து12 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது.

இது குறித்து பாலாஜி உடுமலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவுகளும் எடுக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.

போலீஸ் விசாரணையில் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் ஊழியரான கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியைச் சேர்ந்த பிரபாகரன் (29) இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து பிரபாகரன் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடம் இருந்து பணம் மற்றும் கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் அடங்கிய பெட்டியும் பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...