வால்பாறை கூலாங்கல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு - தண்ணீரில் சிக்கியவர்கள் மீட்பு

வால்பாறை அருகே கூலாங்கல் ஆற்றில் திடீரென பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீரில் சிக்கியவர்களை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.



கோவை: கூலாங்கல் ஆற்றில் திடீர் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் இரண்டு தினங்களாக மதியத்திற்கு மேல் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளிலும், வனப்பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இன்று காலையிலிருந்து வெயிலின் தாக்கம் சற்று கூடுதலாக இருந்தது.

மதியத்திற்கு பின்பு வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளிலும் சின்னக்கல்லார், சிங்கோனா, போன்ற வன பகுதிகளிலும் கன மழை பெய்தது. சின்னக்கல்லார் பகுதியில் 7 செ.மீ மழை பதிவானது. அதிக மழையால் கூலாங்கல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.



அப்போது வால்பாறை பகுதியில் மழை இல்லாத நிலையில் கூழாங்கல் ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் சிலர் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது அதிக தண்ணீர் வந்ததால் தவித்தனர்.



தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் அவர்களை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...