மதுகுடிப்பதற்கு அரசு வழங்கிய சிறப்பு அனுமதி - கோவையில் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விமர்சனம்!

தமிழகத்தில் விளையாட்டு மைதானங்களில் மது அருந்துவதற்கு சிறப்பு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுபானங்களை வீட்டுக்கு வீடு டோர் டெலிவரி செய்து விடலாம் என்றும் காட்டமாகத் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை தெற்கு சட்டமன்ற சாய்பாபா காலனி பகுதிக்குட்பட்ட 69வது வார்டில் உள்ள பூங்காவை சீர்படுத்தி விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிக்கான பூஜை போடபட்டது.



விளையாட்டு மைதான பணிகளை துவக்கி வைத்த கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவியுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், அங்கன்வாடி மையங்கள் பூங்காக்களுக்கு முன்னுரிமை கொடுத்து அதிகளவில் தனது தொகுதி மேம்பாட்டு நிதி செலவிடப்பட்டு வருவதாகவும், அரசு நகர்புறங்களில் கட்டிடங்கள் கட்டுவதை ஊக்குவிப்பதை விட பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார்.

மதுபானம் குறித்து தமிழக அரசு கொண்டு வந்துள்ள சட்ட திருத்தம் குறித்து பேசிய அவர், இது எங்கு சென்று முடியும் என்று தெரியவில்லை, ஒரு பக்கம் மதுக்கடைகளை படிப்படியாக குறைப்பதாக கூறிவிட்டு திருமண மண்டபங்களில், வீடுகளில், விளையாட்டு மைதானங்களில் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று மது அருந்திக்கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது என்பது மது குடிப்பதை அரசே ஊக்குவிப்பது போல் உள்ளது என குற்றம்சாட்டினார்.



இதற்கு டோர் டெலிவரி செய்யலாம் என காட்டமாக தெரிவித்தவர்.

இது ஏமாற்று விஷயம் என்றவர், இது ஒரு சமூக சீரழிவை ஏற்படுத்தும். மக்களை சீரழிவை நோக்கி இழுத்து செல்லும் முயற்சியை அரசு செய்து வருகிறது. இந்த விதிவிலக்கு மற்றும் சட்ட திருத்தம் என்பதை உடனடியாக அரசு திரும்ப பெற வேண்டுமென்றார். இதனை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கமாட்டோம் என்றார்.

மதுக்கொள்கையில் இந்த அரசு நேரடியாக செய்ய முடியாததை மறைமுகமாக செய்வதாக குற்றம்சாட்டினார்.

நிதியமைச்சர் ஆடியோ விவகாரம் தொடர்பாக பாஜகவினர் ஆளுனரை சந்தித்துள்ளதாகவும், கவர்னர் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வார் என நம்புவதாகவும், உண்மை தன்மையை மாநில அரசே நிரூபிக்க வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் கேட்டுக்கொண்டார்.

எந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக சந்தேகம் எழுகிறதோ அவர்கள்மீது சட்ட ரீதியான ஏஜென்சிகள், சோதனை செய்வது என்பது இயல்புதான். குறிப்பிட்ட நிறுவனங்கள் என்று இல்லை, தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக சோதனை நடத்தப்படுகிறது.

அதற்கான விளக்கத்தை கொடுத்தால் சோதனை முடிவுறும் என்றும் தெரிவித்த அவர், இதற்காக அரசியல் கட்சியினர் நடத்தும் நிறுவனங்கள் மீது ரெய்டு நடத்த கூடாது என எதிர்பார்க்க முடியாது என்றும் கூறினார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...