சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை- தமிழக அரசு தடுக்க கோரிக்கை

சிறுவாணி ஆற்றின் குறுக்கே அட்டப்பாடி கூலிகடவு-சித்தூர் சாலையில் நெல்லிபதி என்ற இடத்தில் கேரளா அரசு ஐந்து அடி உயரத்தில் தடுப்பணை கட்டி 90 சதவீத பணிகள் முடிந்திருக்கின்றது. இந்த பணிகளை அரசு நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தந்தை பெரியார் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் கோரிக்கை வைத்துள்ளார்.


கோவை: சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை உடனடியாக தமிழக அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என தந்தை பெரியார் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கோரிக்கையில், கோவை மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிற சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள மாநிலம் அட்டப்பாடி கூலிகடவு-சித்தூர் சாலையில் நெல்லிபதி என்ற இடத்தில் கேரளா அரசு ஐந்து அடி உயரத்தில்தடுப்பணை கட்டி 90 சதவீத பணிகள் முடிந்திருக்கின்றது.



மேலும் இரண்டு தடுப்பணைகளை கட்ட திட்டமிட்டு இருக்கின்றார்கள்.

ஏற்கனவே சிறுவாணி அணையில் மழை காலங்களில் முழு கொள்ளளவை 52 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்க விடாமல் கேரளா அரசு தடுத்து வருகிறது. கோடை காலத்தில் வரக்கூடிய தண்ணீரையும் சிறுவாணி அணைக்கு வராமல் தற்போது தடுப்பணைகளை கட்டி வருகிறது.



சிறுவாணி ஆறும், பவானி ஆறும் காவிரி மேலாண்மை வாரியத்தில் கட்டுப்பாட்டில் உள்ள ஆறுகள்.ஆனால் கேரளா அரசு காவிரி மேலாண்மை வாரியத்திலும் அனுமதி பெறாமல் சிறுவாணியில் தடுப்பணைகளை கட்டி வருகிறது.



இந்த தடுப்பணைகளை தடுக்காவிட்டால் கோவை மாவட்டத்திற்கு முழுமையாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். ஏற்கனவே பவானி ஆற்றிலும் இதுபோல தடுப்பணைகளை கட்டியுள்ளது.எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு சிறுவாணியில் கட்டப்படும் தடுப்பணைகளை தடுத்து நிறுத்திட வேண்டும்.

கேரள அரசானது இந்த திட்டத்தை கைவிடாவிட்டால், அனைத்து கட்சி, இயக்கங்கள், பொதுமக்களை ஒன்று திரட்டி மிகப் பெரிய போராட்டத்தை முன்டெடுக்க நேரிடும் எனவும் எச்சரிக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...