கோவை அருகே தனியார் நிறுவனம் சார்பில் அரசுப் பள்ளிக்கு கம்ப்யூட்டர் மையம்!

கோவையைச் சேர்ந்த கன்சாலிடேடெட் நிறுவனம் சார்பில் கோவை நாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு 15 லட்சம் செலவில் கம்ப்யூட்டர் மையம் அமைத்துக் கொடுக்கப்பட்டது.


கோவை: நாயக்கன்பாளையம் அரசுப் பள்ளிக்கு தனியார் நிறுவனம் சார்பில் கம்ப்யூட்டர் மையம் அமைத்து கொடுக்கப்பட்டது.



கோவையைச் சேர்ந்த கன்சாலிடேடெட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், புதிய தொழில்நுட்பம் சார்ந்த கல்வி முன்னெடுப்புத் திட்டத்தில், கோவை நாயக்கன்பாளையம் அரசு மேல் நிலைப் பள்ளியில் 'கம்யூட்டர் மையம்” நிறுவியுள்ளது.



இந்த அரசு பள்ளியின் 500 மாணவர்களுக்கு உதவும் வகையில் 15 லட்சம் ரூபாய் செலவில் நவீன கம்ப்யூட்டர்கள், தடையில்லா மின்சார சாதனம் மற்றும் கம்ப்யூட்டர் மையத்திற்கான அடிப்படை வசதிகள் டேபிள், சேர் என அனைத்தும் வழங்கப் பட்டுள்ளது. மாறிவரும் காலத்திற்கேற்ப மாணவர்கள் நவீன தொழில்நுட்ப வசதிகளோடு கல்வி பயின்று, மாணவர்கள் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க இது உதவும்.

இவ்விழாவில், பிரிகால் நிறுவனத் தலைவர் வனிதா மோகன், தலைமை விருந்தினராக சிறப்பித்து கம்ப்யூட்டர் மையத்தினை திறந்து வைத்து வாழ்த்திப் பேசும்போது:-



“மாணவர்கள் கம்ப்யூட்டர் மையத்தினை நன்றாக பயன் படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும். தொலை நோக்குப் பார்வையில், நாட்டின் வளர்ச்சிக்கு இத்தகைய முயற்சிகள் மிகவும் அவசியமானவை. மாறிவரும் கல்விச்சூழலில் எதிர்கால நன்மை கருதி இது போன்ற முன்னெடுப்புகளில் ஆத்மார்த்தமாக ஈடுபட்டு வரும் ராகேஷ் அவர்களை மனமார பாராட்டுகிறேன்.”, என்றார்.

கன்சாலிடேடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் ராமானந்த் பேசுகையில், “சமூகநலனுக்காக, இது போன்ற நவீன கட்டமைப்பு வசதி உதவிகள் வெறும் பொறுப்பு சார்ந்தது மட்டுமல்ல, நாட்டின் வளர்ச்சியில் பங்கு பெறக்கிடைத்த நல்ல வாய்ப்புமாகும். அரசு மற்றும் தனியார் அமைப்புகளில் உள்ள எல்லோருமே, சமூக வளர்ச்சியில் பங்கேற்க வேண்டும். இந்த கூட்டுமுயற்சிகள், எதிர்கால சந்ததியினருக்கு பிரகாசமான வளர்ச்சியை உத்திரவாதப்படுத்தும்.

இந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, முதல் கட்டமாக 100 க்கும் மேற்பட்டோர் பயனடையும் வகையில் கம்ப்யூட்டர் மையம் துவக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் காலத்தில், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்களுடன் கலந்து பேசி, பிற அவசியத் தேவையையும் பூர்த்திசெய்து வழங்கவுள்ளோம்" - என்றார்.

கன்சோலிடேட்டட் பிரைவேட் லிமிடெட் இயக்குனர் தாக்க்ஷாயினி ராகேஷ், இந்த முயற்சி குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்; "கல்வியில் முதலீடு செய்வது எதிர்காலத்தின் முதலீடு ஆகும், மேலும் இந்த மாணவர்களுக்கு அந்த எதிர்காலத்தை வடிவமைப்பதில் கன்சோலிடேட்டின் பங்கு மகிழ்ச்சியைத் தருகிறது" என்று அவர் கூறினார்.

நாயக்கன்பாளையம் கிராமத்து அரசு மேனிலைப் பள்ளியில், கம்ப்யூட்டர் மையம், தடையில்லா மின்சார சாதனம், மேஜை, இருக்கைகள், மேலும் அடிப்படைத் தேவைச் சாதனங்கள் அனைத்தும் பள்ளியின் தலைமையாசிரியர் ராஜேந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், கன்சோலிடேட்டட் பிரைவேட் லிமிடெட் ஊழியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் திரளாக கலந்துக் கொண்டனர். கன்சாலிடேடெட் நிறுவனம் ஐ பிளாண்ட் பிராண்டு மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. மேலும் சோனி, எல்.ஜி, லினன் கிளப், தனிஷ்க் வழங்கும் மியா நகைக்கடைகளையும் இந்நிறுவனம் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...

கோவையில் நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற இளைஞரை கடித்து விரட்டிய தெரு நாய்கள்..! - சிசிடிவி

கோவை துடியலூர் அருகே நள்ளிரவில் பெண்ணிடம் அத்துமீற முயன்ற நபரை தெருநாய்கள் விடாமல் குரைத்து, கடித்து துரத்தும் சிசிடிவி...

Bharathiar University Hosts Workshop on Curriculum Design and Outcome-Based Education

Bharathiar University, Coimbatore, in association with TANSCHE, organised a one-day workshop on curriculum design and as...

பீளமேடு வார்டில் மரம் அகற்றல், கொசு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் மின்வாரியம் வெட்டிய மரங்களை அகற்றுதல், கொசு மருந்து தெளித்தல் மற்றும் சாக்கடை ச...

கோவையில் அடல் ஓய்வூதியத் திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கனரா வங...

டிஜிட்டல் மயமாகும் ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.: மாற்றுப் பணி கோரும் கோவை ஒப்பந்த ஊழியர்கள்

அரசு உத்தரவின் பேரில், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்று (RC) உள்ளிட்ட ஆவணங்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்ப...