தாராபுரம் அருகே மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரித்த நெகிழிக்கான மாற்று பொருள் கண்காட்சி!

தாராபுரம் அருகேயுள்ள கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் நெகிழிக்கு மாற்றாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யும் இயற்கை பொருள் கண்காட்சி மற்றும் நெகிழிக்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியில் 250க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.


திருப்பூர்: தாராபுரம் அருகேயுள்ள கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் நெகிழிக்கு மாற்றாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் இயற்கை பொருள் கண்காட்சி நடைபெற்றது.

நெகிழி ஒழிப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே நெகிழிக்கு மாற்றாக இயற்கை பொருள் கண்காட்சி மற்று உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.



தாராபுரம் அடுத்த கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் வறுமை ஒழிப்பு சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்கள் கண்காட்சி நடைபெற்றது.

கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், திருப்பூர் மாவட்ட மகளிர் திட்ட இணை இயக்குனர் வரலட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மேலும், தொப்பம்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விமலா கந்தசாமி முன்னிலை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் சிறப்புரையாற்றிய நிலையில், தாராபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ரமேஷ் நன்றியுரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில், தாராபுரம், மூலனூர், குண்டடம், பொங்கலூர் வட்டார மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள், வறுமை ஒழிப்பு சங்க பொறுப்பாளர்கள், சுய உதவி குழுக்கள் உறுப்பினர்கள் 250க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு நெகிழி ஒழிப்பு உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டனர்.

இவ்விழாவில் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி ரமேஷ், நெகிழியை பற்றியும், நெகிழியால் ஏற்படும் கொடிய நோய்களை பற்றியும் மாசற்ற தமிழகத்தை உருவாக்க நெகிழியை ஒழிப்போம் என்று உறுதிமொழி ஏற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்புரை ஆற்றினார்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...