பொள்ளாச்சியில் போக்குவரத்து காவலர்களிடம் தகராறு - போதை இளைஞர் அட்ராசிட்டி!

பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே குடிபோதையில் இளைஞர் ஒருவர், போக்குவரத்து காவலர்களை தகாத வார்த்தையால் திட்டி பணிசெய்ய விடாமல் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையில் பொள்ளாச்சி சமத்துவபுரத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பது தெரியவந்தது.



கோவை: பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் போக்குவரத்து காவலர்களுடன் மதுபோதையில் இளைஞர் தகராறில் ஈடுபட்டார்.

பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் இன்று காலை வழக்கம் போல நகர போலீசார் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக வந்த இளைஞர் ஒருவர் தாறுமாறாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்ததை கண்ட போலீசார் நிறுத்தி விசாரித்தனர்.



ஆத்திரமடைந்த போதை இளைஞர் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் போலீசாரை தகாத வார்த்தைகளில் திட்டிய இளைஞரை கண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்கள் திகைத்து நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினர்.



இதனால், செய்வதறியாது திகைத்து நின்ற போலீசார், இளைஞரை சமரசம் செய்ய முயன்றனர். ஆனால், அடங்காத போதை இளைஞரால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது. பின்னர் அங்கிருந்த போலீசார், போதை இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

விசாரணையில், பொள்ளாச்சி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பது தெரியவந்தது. மாற்று திறனாளி என்பதால் அறிவுறை கூறி அந்த இளைஞரை போலீசார் அனுப்பி வைத்தனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...