பால் விலை உயர்த்தாததைக் கண்டித்து உடுமலையில் விவசாயிகள் நூதன போராட்டம்!

உடுமலையில் கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. மாடுகளுக்கான உலர் தீவனம், அடர் தீவனம் உள்ளிட்டவற்றின் விலை மிகவும் உயர்ந்துள்ளது. ஆனால் பால் விலை உயர்த்துவதில் அலட்சியம் காட்டப்படுவதை கண்டித்து விவசாயிகள் நூதன போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.


திருப்பூர்: உடுமலையில் பால் விலை உயர்த்தாததைக் கண்டித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நாள் முழுவதும் பசுவிடமிருந்து பாலைக் கறக்காமல் கன்றுக்கு மட்டும் கொடுத்து நூதன போராட்டத்தை நடத்த விவசாயிகள் திட்டமிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, விவசாயம் சார்ந்த உபதொழிலாக கால்நடை வளர்ப்பு உள்ளது. விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்காத போது கால்நடை வளர்ப்பு கைகொடுக்கும். ஆனால் சமீப காலங்களாகக் கால்நடை வளர்ப்பிலும் வருவாய் ஈட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாடுகளுக்கான உலர் தீவனம், அடர் தீவனம் உள்ளிட்டவற்றின் விலை மிகவும் உயர்ந்துள்ளது. ஆனால் பால் விலை உயர்த்துவதில் அலட்சியம் காட்டப்படுகிறது. பால் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்த வேண்டும்.

கறவை மாடுகளுக்கு காப்பீடு வழங்க வேண்டும், மானிய விலையில் கால்நடைத் தீவனங்களை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி பாலை ரோட்டில் கொட்டி போராட்டம் என பலவிதமான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். ஆனாலும் பயனில்லாத நிலையே உள்ளது. எனவே அரசுத்துறைகளைப் போல ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

அதன்படி ஒருநாள் மட்டும் மாட்டுப் பாலை கன்றுகளுக்கும், சொந்தப் பயன்பாட்டுக்கும் மட்டுமே பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். அப்போதுதான் விவசாயிகளின் அருமை மற்றவர்களுக்குத் தெரியும். இந்த போராட்டம் பல நாட்கள் தொடர்ந்தால் என்ன ஆகும் என்பதை உணர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Newsletter

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...

Elderly Woman Killed in Truck Collision near Velandipalayam in Coimbatore

A 70-year-old woman was killed after the scooter she was travelling on with her daughter was hit by a heavy truck on Tha...

Break-In: 100 Kg of Silver Stolen from House in Coimbatore’s Oppanakara Street

A major burglary has been reported at the residence of an auditor on Oppanakara Street in Coimbatore, where unidentified...