கல்லூரி மாணவிகளும் போதைக்கு அடிமையாகி உள்ளனர்..! - இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வேதனை!

கோவையில் இந்து முன்னணி சார்பில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த காடேஸ்வரா சுப்பிரமணியம் கல்லூரி மாணவிகளும் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.


கோவை: கோவை சிட்கோ பகுதியில் இந்து முன்னணி சார்பில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

போதையில்லா தமிழகம் அமைக்க உறுதியேற்போம், போதைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை இந்து முன்னணி அமைப்பினர் தற்போது துவங்கியுள்ளனர்.



அதன் முதல் விழிப்புணர்வு பேரணி கோவையில் நடைபெற்றது.



இந்து இளைஞர் முன்னணி கோவை மாநகர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற இந்த பேரணியில் இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் கலந்து கொண்டார்.



கோவை சிட்கோ பகுதியில் துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியானது சங்கம் வீதி வரை நடைபெற்றது.



இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பியவாறு பேரணி மேற்கொண்டனர்.

இதில் செய்தியாளர்களை சந்தித்த காடேஸ்வர சுப்ரமணியம் பேசியதாவது,



மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பேரணி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இது குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த இந்து முன்னணி சார்பில் முயற்சி நடைபெற்று வருகிறோம்.

போதை பொருள் பல்வேறு வடிவங்களில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளில் இருந்து வந்து கொண்டிருக்கிறது என நாங்கள் செய்தியாளர்கள் மத்தியிலும் உளவுத்துறையிலும் தெரிவித்து வருகிறோம்.

தற்போது கல்லூரிகளில் மாணவிகளும் போதை பொருளுக்கு அடிமையாகி உள்ளனர். பெண்கள் இன்றைக்கெல்லாம் மது கடைகளுக்கு நேரடியாக சென்று மது அருந்தக் கூடிய அளவிற்கு இந்த நாடு சென்று கொண்டிருக்கிறது. இந்த அரசாங்கம் டாஸ்மாக் கடையை ஒழிக்க வேண்டும்.

போதைப்பொருள் எங்கு விற்பனையாகிறது? அதன் ஏஜென்டுகளாக யார் இருக்கிறார்கள்? என காவல்துறை அதிகாரிகளுக்கும் தெரியும். இதுகுறித்து காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு கல்லூரி மாணவர்களையும் பெண்களையும் காப்பாற்ற வேண்டும் இல்லையெனில் வருகின்ற காலங்களில் தமிழ்நாடு மிக மோசமான நிலைக்குச் செல்லும்.

மேலும் இதுகுறித்து தமிழ்நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில் முதல் கட்டமாக கோவையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...