கோவை பூச்சியூர் பண்ணாரியம்மன் கோவில் பூக்குண்ட உற்சவ விழா

கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த பூச்சியூர் பகுதியில் உள்ள சஞ்சீவி பண்ணாரி மாரியம்மன் கோவிலின் 50ம் ஆண்டு பூக்குண்ட உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


கோவை: கோவை நரசிம்மநாயக்கன் பாளையம் அருகேயுள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலின் 50ம் ஆண்டு பூக்குண்ட உற்சவ விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

கோவை நரசிம்ம நாயக்கன்பாளையத்தை அடுத்த பூச்சியூர் இராவுத்தக்கொல்லனூரில் சஞ்சீவி பண்ணாரி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் 50ம் ஆண்டு பூக்குண்ட உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

பூக்குண்ட உற்சவத்தின் முதல் நிகழ்வாக கடந்த 27ம் தேதி கணபதி ஹோமம் மற்றும் பூச்சாட்டுதல், கம்பம் நடுதல் நிகழ்வுடன் தொடங்கி நேற்று சஞ்சீவி வனத்தீர்த்தம் கொண்டுவருதல், சக்தி அழைத்தல், குண்டம் திறப்பது, அக்னி குண்டத்தில் அக்னி ஏற்படுத்துதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது.



தொடர்ந்து இன்று காலை சக்தி கரம் அழைத்தலை தொடர்ந்து பூக்குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பூக்குண்டம் இறங்கினர். தொடர்ந்து பூவோடு எடுத்தல், அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகளும் நடைபெற்றன.



இந்த திருவிழாவில், சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Newsletter

கோவை பி.கே.புதூர் சிறுபாலத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண்.92க்கு உட்பட்ட பி.கே.புதூர், பெருமாள்சாமி நகரில் அமைக்கப்பட்டுள்ள சிறுபாலத்தின...

கோவையில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா, தொழிலாளர்களுக்கு பரிசுகள் வழங்கல்

கோவை கவுண்டம்பாளையம் மைதானத்தில் பி.ஜே.எம்.எம். அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் சார்பில் விஸ்வகர்மா ஜெயந்தி மற்றும் தேசிய...

Systemic Corruption Persists Unabated: Coimbatore Unit of Anti-Corruption Movement

The Coimbatore district unit of the Anti-Corruption Movement submitted a representation to Tamil Nadu Chief Minister C J...

கோவை ரயில் நிலையம் அருகே சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்; போலீசார் விசாரணை

கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்செட் சாலையில் சாக்கடை கால்வாயில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பர...

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...