கோவையில் உலக ஆட்டிசம் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி - மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு!

உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு கோவையில் ஆட்டிசம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், குமரகுரு கல்லூரி அரங்கில் கௌமார பிரசாந்தி சிறப்பு பள்ளி சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


கோவை: உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் நடனமாடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.



கோவை சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு கல்லூரி அரங்கில் உலக ஆட்டிசம் தினத்தை முன்னிட்டு, ஆட்டிசம் குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கௌமார பிரசாந்தி சிறப்பு பள்ளி சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூறுக்கும் மேற்பட்ட சிறப்பு குழந்தைகள் கலந்து கொண்டனர்.



முன்னதாக நிகழ்ச்சியில் சிறப்பு குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள் உள்ளிட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கலை நிகழ்ச்சிகள், ஓவியம், விளையாட்டு உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் போட்டிகளில் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் அசத்தினர்.



தொடர்ந்து நடைபெற்ற பரிசு வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கௌமார மடாலயம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், குமரகுரு கல்வி நிறுவனங்களின் தாளாளர், சங்கர் வானவராயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.



விழாவில் சிறப்பு குழந்தைகள் பாடல் இசையுடன் ஆடிபாடினர். சிறப்பு குழந்தைகளை கைகளை தட்டி பெற்றோர் மற்றும் பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்திய குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...