அதிமுக நிர்வாகிகளுக்கு வந்த தொல்லை அழைப்புகளுக்கு பின்னணியில் திமுக ஸ்டாலின் மருமகன் மீது புகார் அளிக்க இருப்பதாக அமைச்சர் வேலுமணி தகவல்



அதிமுக நிர்வாகிகளுக்கு வந்த தொலைபேசி அழைப்புகளுக்கு பின்னால் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் இருப்பதாகவும், கட்சி தலைமையில் இருந்து சட்டரீதியான நடவடிக்கைக்கு புகார் அளிக்க இருப்பதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

கோவை மாவட்ட அதிமுக தலைமை  அலுவலகத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு செயலாக்க  திட்ட அமைச்சர எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அதிமுக ஆட்சியை கலைத்துவிட்டு குறுக்கு வழியில்  திமுக ஆட்சியை கொண்டு வர திமுகவினர் முயற்சி மேற்கொண்டனர் என குற்றம்சாட்டினார்.திமுகவின் முயற்சியை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஓற்றுமையாக இருந்து முறியடித்து இருப்பதாகவும் வேலுமணி தெரிவித்தார்.



கோவை மாவட்டத்திற்கு என ஏராளமான திட்டங்களை ஜெயலலிதா ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்  எனவும் மெட்ரோ ரயில், அத்திகடவு அவினாசி திட்டம்,ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்,விமான நிலைய விரிவாக்கம் போன்ற  திட்டங்களை  நிறைவேற்ற வேண்டிய கடமைகள் அதிமுகவிற்கு இருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார். மேலும் நான்கு ஆண்டு அதிமுக ஆட்சி தொடரவேண்டும் என்பதே அதிமுகவினரின்  விருப்பமாக இருக்கிறது எனவும்  அவர் தெரிவித்தார்.

தொகுதி மக்கள் என்ற பெயரில் மர்ம நபர்கள் சிலர் தனக்கு போன் செய்து பேசியதாகவும் , இது போன்ற அடையாளம் தெரியாத நபரகள் பேசிய தொலைபேசி எண்கள் சைபர்கிரைம் காவல்துறையிடம்  ஓப்படைக்கப்பட்டுள்ளது எனவும் திமுகவினரே  இந்த செயல்களில் ஈடுபட்டதாகவும்  அமைச்சர் வேலுமணி குற்றம்சாட்டினார். தொலைபேசி அழைப்புகள் அதிமுகவினருக்கு வந்ததன்  பின்னணியில் ஸ்டாலின் மருமகன் சபரீசன் இருப்பதாகவும் , கட்சியின் தலைமை மூலம் காவல்துறையில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட இருப்பதாகவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

மேலும் சென்னையில் குடிநீர் பிரச்சினை 2 மாதங்களுக்கு இருக்காது எனவும்,  அதன் பின்னர் திருவள்ளூர் மாவட்டத்தில்  உள்ள 300 விவசாய கிணறுகள் மூலம்  100 எம்.எல்.டி தண்ணீர் எடுக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட இருப்பதாகவும்  தெரிவித்த அமைச்சர் வேலுமணி லாரிகள் மூலம் தினமும் 3500 டிரிபபாக இருக்கும் தண்ணீர் விநியோகத்தை 6500 டிரிப்பாக உயர்த்த இருப்பதாகவும் , குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டு வருவதாகவும் வேலுமணி தெரிவித்தார்.

மேலும் கோவை மாவட்டத்திலும் குடிநீர்ப்பிரச்சினைகளை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்த அவர், அவினாசி அத்திகடவு திட்டத்தை செயல்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.மேலும் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் கேரள அரசின் நடவடிக்கையினை நீதிமன்றம் மூலம் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.



Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...