உடுமலையில் போட்டித் தேர்வு நூல்களை இலவசமாக வழங்கும் கருவூல அலுவலர் - குவியும் பாராட்டு!

உடுமலையில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில், மாணவர்கள் பயன்பெறும் வகையில் போட்டித் தேர்வு நூல்களை இலவசமாக வழங்கி வரும் பொள்ளாச்சி சார் நிலை கருவூல அலுவலர் முத்துக்குமாருக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


திருப்பூர்: உடுமலையில் இலவசமாக போட்டி தேர்வு நூல்கள் வழங்கி மாணவர்களை சார்நிலை கருவூல அலுவலர் உற்சாகப்படுத்தி வருகிறார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள கிளை நூலகம் இரண்டில் போட்டி தேர்வுக்கான பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் மாணவர்கள் பயிற்சி பெற்று அரசு தேர்வு எழுதி வெற்றி பெற்று அரசுப் பணியில் சேர்ந்து வருகின்றனர்.

மாணவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் பொள்ளாச்சி சார் நிலை கருவூல அலுவலர் முத்துக்குமார், மாணவர்கள் பயன்பெறும் வகையில் போட்டித் தேர்வு நூல்களை இலவசமாக வழங்கி வருகிறார். தற்பொழுது ரூ.10,000 மதிப்புள்ள பல்வேறு மத்திய, மாநில அரசு போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளும் வகையிலான நூல்களை வழங்கினார்.

கடந்த முறை நடந்த தேர்வில் 11 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு 9 பேர் டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிய நிலையில், இருவர் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தில் புதிய Pre-Incubation Centre மற்றும் Startup Studio தொடக்கம்

கோவை கற்பகம் உயர்கல்வி நிறுவனத்தின் 'கற்பகம் புத்தாக்கம் மற்றும் இன்குபேஷன் கவுன்சில்' (KIIC), தனது புதிய 'Pre-Incubatio...

2016 ஆனைமலை இளைஞர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு

ஆனைமலை காவல் நிலையத்தில் குற்ற எண் 369/2016-ன் கீழ் பதிவான கொலை வழக்கில், மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாப்பான் @ சுதானந்தம...

ஜெம் வீரமணி வழக்கு: கோவை காவல் ஆணையர் உள்பட 2 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் மற்றும் கூடுதல் ஆணையர் அருண் ஆகிய இரு மூத்த ஐபிஎஸ் அதிகா...

கோவை–போத்தனூர் இடையே பராமரிப்பு பணி: செப்.25, 26-ல் இரு மெமு ரயில் சேவையில் மாற்றம்

செப்டம்பர் 25 மற்றும் 26, 2026 ஆகிய தேதிகளில் கோவை-போத்தனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற...

கோவையில் பார் ஊழியரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது

கோவை புலியகுளம் ரோடு பங்கஜாமில் ரோடு பகுதியில் உள்ள சன்ரிச் 11 - 11 பாரில் ஊழியர் பாண்டியராஜனிடம் இலவச மதுபானம் கேட்டு ம...

கோவை தடாகம் சாலையில் ஆம்புலன்ஸ் பணிமனையில் தீ விபத்து

கோவை தடாகம் சாலையில் உள்ள கோயில்மேடு அருகே ஆம்புலன்ஸ் பணிமனையில் திடீரென தீ பரவியது. இதனால் கரும்புகை மேகங்களாக சுற்றுவட...