முன்விரோதம் காரணமாக கோவை மாநகராட்சி ஊழியருக்கு கத்திக்குத்து - 2 இளைஞர்கள் கைது!

தொண்டாமுத்தூரை சேர்ந்த மாநகராட்சி ஊழியரிடம் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர், ஆத்திரமடைந்து கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய நிலையில், திண்டுக்கலில் பதுங்கியிருந்த இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.


கோவை: தொண்டாமுத்தூர் அருகே மாநகராட்சி ஊழியரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய இளைஞர்கள் இருவரை போலீசார் திண்டுக்கலில் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த நரசீபுரத்தை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். இவரது மகன் சபரிநாதன் (23). இவர் கோவை மாநகராட்சி தெற்கில் குடிநீர் திறப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் அவர் குனியமுத்தூர் பி.கே.புதூரில் உள்ள மதுரை வீரன் கோவில் அருகில் நின்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு வந்த 2 இளைஞர்கள் சபரிநாதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த இருவரும் சேர்ந்து சபரிநாதனை கத்தியால் குத்தினர். அதில், இடுப்பு, வயிறு, மார்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த சபரிநாதன், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், முன்விரோதம் காரணமாக குடிபோதையில் இந்த கத்தி குத்து சம்பவம் நடந்திருக்கலாம் என தெரிகிறது.

மேலும், சபரிநாதனை கத்தியால் குத்தியது அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கிறிஸ்டோபர், வினித் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் திண்டுக்கல் மாவட்டத்தில் பதுங்கி இருந்த இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

மாணவர் அமுதன் மரணம், தமிழகத்தில் அதிகரிக்கும் குற்றங்களை கண்டித்து கோவையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

கோவை மாணவர் அமுதன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற...

கோவை நவக்கரை ஏ.ஜே.கே. கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வுடன் சிறப்பான ஓணம் விழா

கோவை நவக்கரையில் உள்ள ஏ.ஜே.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 14 முதல் 20 வரை ஓணம் விழா கொண்டாடப்பட்டது. போதைப்...

பேரூர் பகுதியில் 1.10 டன் புகையிலை பொருள்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பேரூர் பகுதியில் சுமார் 1.10 டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செ...

மசக்காளிபாளையம் நகராட்சிப் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் முதலிடம்

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் நடைபெற்ற கேரம் போட்டியில் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஒற்றையர் மற்று...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பிரதான சாலையில் முட்புதர் அகற்றும் பணி

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் வார்டு எண் 98ல் பொள்ளாச்சி பிரதான சாலை எல்ஐசி காலனி பகுதியில் சாலையோர செடிகள் மற்றும் முட...

கோவை ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி – உயிர் அமைப்பு இடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலுப்படுத்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மற்றும் உயிர் அமைப்பு இடையே புரிந்துண...