கோவையில் காவலர்கள் குடும்பங்களுக்காக 3 இடங்களில் ஆவின் பாலகங்களை திறப்பு!

கோவை மாநகரில் காவல்துறையினர் குடும்பங்களுக்காக ஆயுதப்படை வளாகம், காந்திபுரம் காவலர் குடியிருப்பு மற்றும் உப்பிலிபாளையம் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட ஆவின் பாலகங்களை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். இதில், பால், நெய், இனிப்பு வகைகள் என 45 விதமான பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.


கோவை: கோவை மாநகரில் காவல்துறையினர் குடும்பங்களுக்காக ஆயுதப்படை வளாகம் உள்ளிட்ட 3 இடங்களில் ஆவின் பாலகங்களை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் ஆவின் பாலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மாநகர காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்காக 3 இடங்களில் ஆவின் பாலகங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கோவை மாநகர ஆயுதப்படை வளாகம், காந்திபுரம் காவலர் குடியிருப்பு மற்றும் உப்பிலிபாளையம் காவலர் குடியிருப்பு ஆகிய மூன்று இடங்களில் தனித்தனியாக உயர்தர ஆவின் பாலகங்கள் அமைக்கப்பட்டன.



இதனை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் இன்று திறந்து வைத்தார்.



இந்த பாலகங்களில் பால், நெய், வெண்ணெய், இனிப்பு வகைகள் உள்ளிட்ட 45 வகையான பால் பொருள்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் கோவை மாநகர ஆயுதப்படை துணை காவல் ஆணையர் முரளிதரன், கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் சுகாசினி, ஆயுதப்படைக் காவல் உதவி ஆணையர் சேகர், கோவை ஆவின் நிறுவன பொதுமேலாளர் ராமநாதன் மற்றும் காவலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...