குடிநீர் குழாய் உடைப்பால் கோவையில் மார்ச் 26,27 குடிநீர் வினியோகம் தடை - மாநகராட்சி ஆணையர் தகவல்!

பிரதான நீரேற்று குழாயில் உடைப்பு காரணமாக மார்ச் 26, 27ஆம் தேதிகளில் கோவை சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், பீளமேடு, சவுரிபாளையம், ஆவாரம்பாளையம், கணபதி, காந்திபுரம், ரத்தினபுரி, சித்தாபுதூர் மற்றும் உக்கடம் பகுதியில் குடிநீர் வினியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையர் பிரதாப் தகவல்.


கோவை: மாநகாட்சிக்கு குடிநீர் வழங்கும் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், இரண்டு நாட்கள் குடிநீர் வினியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் பில்லூர் குடிநீர் திட்டம் II-ல் வெள்ளியங்காடு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகில் முத்துக்கல்லூர் பகுதியில் பிரதான நீரேற்று குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அதனை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால் பில்லூர் திட்டம் II-ன் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படும் சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், பீளமேடு, சவுரிபாளையம், ஆவாரம்பாளையம், கணபதி, காந்திபுரம், ரத்தினபுரி, சித்தாபுதூர் மற்றும் உக்கடம் ஆகிய பகுதிகளில் 26,27ஆம் தேதி ஆகிய இரு நாட்கள் குடிநீர் வினியோகம் இருக்காது.

எனவே பொதுமக்கள் சிரமத்தினை பொறுத்து மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப் தெரிவித்துள்ளார்.

Newsletter

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...