கோவை கருமத்தம்பட்டி அருகே கஞ்சா விற்பனை - ஒருவர் கைது!

கருமத்தம்பட்டி அருகே போலீசார் நடத்திய சோதனையில் காரில் 1.100 கிராம் அளவிலான கஞ்சா எடுத்துச் சென்ற ராமநாதபுரத்தை சேர்ந்த வெங்கடேஸ்வரன் (31) என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் கருமத்தம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான போலீசார் ராமாச்சிபாளையம் ரயில்வே பாலம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், சுமார் ஒரு கிலோ 100 கிராம் அளவிலான கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சாவை வைத்திருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஸ்வரன் (31) என்பவரை கைது செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் இருந்த கஞ்சா மற்றும் காரை பறிமுதல் செய்த போலீசார், வெங்கடேஸ்வரனை நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் தெரிவிக்க வேண்டும் என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையை 94981-81212 என்ற எண்ணில் தொலைபேசி வாயிலாகவும், 77081-00100 என்ற எண்ணிலும் வாட்ஸ் ஆப் மூலமாகவும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...