வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம் - திருப்பூரில் வெறிச்சோடிய தாலுகா அலுவலகங்கள்!

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை ஊழியர்கள் தற்காலிக விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக, மாவட்டம் முழுவதும் தாலுகா அலுவலகங்கள் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை ஊழியர்களின் போராட்டம் காரணமாக தாலுகா அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் வருவாய் துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



வருவாய்த்துறையினரின் கோரிக்கைகள்:-

* வருவாய் துறையில் கடந்த நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட துணை ஆட்சியர் பட்டியலை வெளியிட வேண்டும்.

* உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பதவி இறக்கம் செய்யப்பட்ட துணை வட்டாட்சியர்களின் பதவி உயர்வு ஆணைகளை விரைந்து வழங்கிட வேண்டும்.

* வருவாய் துறையில் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

* 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வருவாய் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அரசாணை வெளியிட வேண்டும்.

* இளநிலை மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையை வெளியிட வேண்டும்.

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருப்பூரிலும் வருவாய் துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதன் காரணமாக திருப்பூரில் உள்ள தாலுகா அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை ஊழியர்களின்றி அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...