யுகாதி பண்டிகை - உடுமலை ரேணுகாதேவி அம்மனுக்கு திருக்கல்யாணம்

யுகாதி பண்டிகையை ஒட்டி உடுமலையில் திருப்பதி கோவிலில் ரேணுகா தேவி அம்மனுக்கு நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்ச்சி, வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்டு வழிபட்ட பக்தர்களுக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளபாளையம் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற உடுமலை திருப்பதி கோவிலில் யுகாதி பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாட்களாக ரேணுகா தேவி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான யுகாதி பண்டிகையையொட்டி இன்று ஸ்ரீ ரேணுகாதேவி அம்மனுக்கு திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.



முன்னதாக, சக்தி புண்யகம், யுகாதி பூஜை, அலங்கார பூஜை, கன்னிகா பூஜை, மற்றும் ராஜ தரிசனம், தம்பதியர் பூஜை, சுமங்கலி பூஜை, மகா தீபாரதனை, ஊஞ்சல் உற்சவம் ஆசிர்வாதம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



பின்னர் பொதுமக்கள் அனைவருக்கும் மதிய விருந்து அளிக்கப்பட்டது. திருக்கல்யாணம் நிகழ்வில் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ரேணுகாதேவி அம்மனை வழிபட்டனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...