மத்திய அரசு அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி - போலீசார் விசாரணை!

கோவையில் உள்ள மத்திய அரசு அலுவலகத்தில் வேலை தருவதாக கூறி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வரும் பிரசாந்த் உத்தமன் என்பவர் மீது சாய்பாபா காலணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: மத்திய அரசு அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டு வரும் நபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவருக்கு இவரது நண்பர் மூலம் சில வருடங்களுக்கு முன் கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த பிரசாந்த் உத்தமன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் பிரசாந்த் உத்தமன், ராஜேஷ்குமாரிடம் கோவை என்எஸ்ஆர் சாலையில் உள்ள மத்திய அரசின் ஹிந்துஸ்தான் ஸ்கவுட் அண்ட் கைட்ஸில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.11,5000 பெற்றுக் கொண்டு, பணி ஆணையை வழங்கியுள்ளார்.

அதனைக் கொண்டு ராஜேஷ்குமார் பணியில் சேரச் சென்ற போது, அது போலியான பணி ஆணை என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராஜேஷ்குமார் பணத்தை திருப்பி தரும்படி பிரசாந்த் உத்தமனிடம் பலமுறை கேட்டுள்ளார். ஆனால் இதுவரை பணத்தை திருப்பி அளிக்காத நிலையில் இது குறித்து ராஜேஷ்குமார் சாய்பாபாகாலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் பிரசாந்த் உத்தமன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே பிரசாந்த் உத்தமன், மதுரை மாவட்டத்தை சேர்ந்த அசோக்குமார் என்ற கார் மெக்கானிக் ஒருவரிடம், வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.9 லட்சத்தை வாங்கிக் கொண்டு போலியான பணி ஆனையை வழங்கி மோசடியில் ஈடுபட்டதாக, சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...