சூலூரில் மளிகை கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 13 சவரன் கொள்ளை!

சூலூர் அடுத்த சுல்தான்பேட்டை பகுதியில் உள்ள மளிகை கடை உரிமையாளர் லட்சுமி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 13 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே மளிகை கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 13 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூலூர் அருகேயுள்ள சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி லட்சுமி (38). இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று லட்சுமி தனது வீட்டை பூட்டி விட்டு கடைக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக திருப்பூருக்கு சென்றுள்ளார்.

அப்போது, பட்டப்பகலில் இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த தங்க செயின், கம்மல், மோதிரம், டாலர் உள்பட 13 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், வீட்டிற்கு திரும்பிய லட்சுமி முன் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து சுல்தான் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவைக்கப்பட்டு, வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் மளிகை கடை உரிமையாளர் வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...