கோவை சேரன் பிசியோதெரபி கல்லூரி சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை சேரன் பிசியோதெரபி கல்லூரி மற்றும் செல்வபுரம் காவல்துறை இணைந்து உலக தலைக்காய விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களிடம் வாசகம் எழுதிய பதாகைகளைக் காட்டி அதை படிக்க செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



கோவை: சேரன் பிசியோதெரபி கல்லூரி மற்றும் செல்வபுரம் காவல்துறை இணைந்து உலக தலைக்காய விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சியை நடத்தினர்.

உலக தலைக்காய விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கோவை சேரன் பிசியோதெரபி கல்லூரி மற்றும் செல்வபுரம் காவல்துறை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.



இந்நிகழ்ச்சியில் செல்வபுரம் காவல் நிலைய காவல்துறையினர், சேரன் பிசியோதெரபி கல்லூரியின் முதல்வர் செல்வராணி, முதல்வர் கார்த்திக் வீரபத்திரன், பிடியாட்ரிக் துறைத் தலைவர் அருணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



செல்வபுரம் சிக்னல் சந்திப்பில், 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் உள்ளிட்ட சாலை பாதுகாப்பு வாசகம் எழுதிய பதாகைகளைக் கையில் ஏந்தியவாறு இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



மேலும் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களிடம் வாசகம் எழுதிய பதாகைகளைக் காட்டி அதை படிக்க செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



இதனை தொடர்ந்து கல்லூரி முதல்வர் பேசுகையில், ''இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். வேக கட்டுப்பாடு உள்ளிட்ட முக்கிய சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் நோக்கில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை, செல்வபுரம் காவல்துறையுடன் இணைந்து நடத்துகின்றோம்'' என்றார்.



மேலும், பிடியாட்ரிக் துறைத் தலைவர் அருணா பேசுகையில், ''இருசக்கர வாகனத்தில் இளைஞர்கள் ஹெல்மெட் அணியாமல் அதிவேகமாக செல்கின்றனர். அதனால், எங்கள் சேரன் பிசியோதெரபி கல்லூரி மாணவர்களை கொண்டே இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்துகின்றோம்'' என்றார்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...